பாஜக பொதுக்கூட்டத்தில் சர்ப்ரைஸ்... திமுக தலையில் பேரிடியை இறக்கிய மோடி... தரமான சம்பவம்...!!
மதுரை தேசிய ஜனநாயக கூட்டணி பிரதமர் கலந்து கொள்ளும் மேடையில் பெரியாரின் புகைப்படம்
மதுரையில் பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்ட வாசலில் பெரியார், எம்ஜிஆர் , ஜெயலலிதா, நரேந்திர மோடி அவர்களின் புகைப்படம்
புதுச்சேரியில் மார்ச் 1 ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மாலை 2:45 மணிக்கு மேல் மதுரை வருகிறார் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மதுரை விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
அதனை தொடர்ந்து மதுரை மண்டேலா நகர் தேசிய ஜனநாயக கூட்டணி மண்டல நகர் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்ட மேடை 150 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. மாலை 4;30 மணிக்கு பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார்.
இதையும் படிங்க: இஸ்ரேலில் கால்பதிக்கும் பிரதமர்.. நெசெட்டில் களமிறங்கும் முதல் இந்திய தலைவர்....!!
இதில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அமமுக டிடிவி தினகரன், பாமக அன்புமணி ராமதாஸ், ஜி கே வாசன் ஐ ஜே கே நிறுவனர் பாரிவேந்தர், ஜான்பாண்டியன், புரட்சி பாரதம் பூவை ஜெகன் மூர்த்தி என் ஆர் தனபாலன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்க உள்ளனர்.
மதுரை மண்டோல நகர் நகர் பகுதியில் பிரதமர் பங்கேற்கும் தேசிய ஜனநாயக பொதுக்கூட்டத்தில் ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது தமிழக காவல்துறை சார்பாக வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் 20க்கும் மேற்பட்ட குழுவினர் வரவழைக்கப்பட்டு மோப்பநாய் கொண்டு தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பொதுக்கூட்ட வாசலில் பெரியார் எம்ஜிஆர் அம்மா நரேந்திர மோடி அவர்களின் புகைப்படம் அமைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழகம் வரும் பிரதமர் மோடி... ஏற்பாடுகள் மும்முரம்..! அதிமுக நிர்வாகிகள் தீவிர ஆலோசனை..!!