பாளையங்கோட்டையில் பகீர் சம்பவம்... போக்சோ கைதி லுங்கியில் தூக்கிட்டு தற்கொலை ...!
நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பகுதியைச் சேர்ந்தவர் திருமலை குமார் வயது 40. இவர் அந்த பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார்.
கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி திருமலை குமார் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தென்காசி அனைத்து மகளிர் காவல்துறையினர் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
இதையும் படிங்க: என் சாவுக்கு காரணம்... மன உளைச்சலில் அரசு அதிகாரி எடுத்த விபரீத முடிவு... பரபரப்பு...!
அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் திருமலை குமார் அடைக்கப்பட்டார். கடந்த 12ஆம் தேதி அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளியில் இருக்கும் பொழுது அதிக மது, கஞ்சா போன்ற போதை பொருட்களை பயன்படுத்தும் பழக்கம் அவருக்கு இருந்ததால் அதை கட்டுப்படுத்துவதற்காக சிறையில் அவருக்கு மருத்துவ கவுன்சிலிங்கும் அளிக்கப்பட்டு வந்திருக்கிறது.
அதிக நேரம் தனிமையிலேயே நேரத்தை கழித்து வந்த திருமலை குமார் இன்று மாலை கழிவறைக்கு சென்று வர வேண்டும் என அங்கிருந்த காவலர்களிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.
நீண்ட நேரம் ஆகியும் அவர் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறை காவலர்கள் கழிவறைக்கு சென்று பார்த்தபோது திருமலை குமார் தான் அணிந்திருந்த லுங்கியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த காவலர்கள் உடனடியாக திருமலை குமாரின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக பெருமாள்புரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட கைதி பாளையங்கோட்டை மத்திய சிறையில் தற்கொலை செய்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: தற்கொலைக்கு தூண்டும் CHAT GPT... பாய்ந்தது வழக்குகள்... உஷார் மக்களே..!