×
 

அதிகாலையில் கேட்ட பயங்கர சப்தம்.. வீட்டு வாசலில் வெடித்த பெட்ரோல் குண்டு.. திமுக நிர்வாகிக்கு அச்சுறுத்தல்..!

திருநெல்வேலி பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய திமுக பொருளாளர் செல்வசங்கர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர் பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வ சங்கர். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். செல்வ சங்கர் திமுகவின் பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய பொருளாளராக பதவி வகித்து வருகிறார். அவரது மனைவி சரஸ்வதி பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய ஒன்பதாவது வார்டு கவுன்சிலராகவும் உள்ளார். இவர்கள் வழக்கம் போல் நேற்று இரவு குடும்பத்தினருடன் சாப்பிட்டுவிட்டு இரவு தூங்கச் சென்றனர். 

இந்த நிலையில், இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் வீட்டின் முன்பு திடீரென பயங்கர வெடி சப்தம் கேட்டுள்ளது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் அச்சத்தில் நடுங்கி உள்ளனர். வீட்டின் வெளியே மர்ம நபர்கள் சிலர் சுற்றித் திரியும் சப்தமும் கேட்டு உள்ளது. ஆனால் சிறுது நேரம் கழித்து சப்தம் அடங்கி உள்ளது. இதை அடுத்து சிறிது நேரம் கழித்து வீட்டை விட்டு வெளியே வந்த செல்வசங்கர்- சரஸ்வதி தம்பதியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையும் படிங்க: பென்சிலுக்காக இப்படியா? 8ம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு.. பள்ளிக்குள் கொலைவெறி தாக்குதல்..!

அவர்களது வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டு ஆங்காங்கே சிறுது சிறிதாக துகல்கள் தீப்பற்றி எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர். தீப்பற்றி எரிந்துகொண்டிருந்த துகல்களை தண்ணீரை ஊற்றி அணைத்து உள்ளனர். அப்போது அக்கம் பக்கத்தினரும் உதவிக்கு வந்துள்ளனர். அதன் பின்னர் இதுகுறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணையை துவங்கினர். தடய அறிவியல் துறையினருடன் இணைந்து தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பாக சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் கைப்பற்றி போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்தபோது 4 பேர் கொண்ட கும்பல் பைக்கில் வந்து பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது.

தற்போது பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அரசியல் காரணங்களுக்காக நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து தகவல் அறிந்த செல்வசங்கர் ஆதரவாளர்கள் வீட்டின் முன்பு குவிந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செல்வசங்கர் கட்சி நிகழ்வுகளுக்கு கொடிகள் கட்டும் பணியை மொத்தமாக எடுத்து செய்து வருகிறார். மேலும் அப்பகுதியில் உள்ள செல்லாயி அம்மன் கோவிலில் சாமியாடி வந்துள்ளார். இவர் சமீபத்தில் உடல்நலக்குறைவால் இறந்த பாளையங்கோட்டை யூனியன் சேர்மன் கே.எஸ்.தங்கபாண்டியனின் வலது கரமாக இருந்து வந்தவர். தற்போது அவர் மறைந்துவிட்ட நிலையில், அவருக்கு எதிரானவர்கள் யாரும் பழைய முன்பகை காரணமாக செல்வசங்கர் வீட்டின்மீது பெட்ரோல் குண்டை வீசியிருக்கலாமா ?


ஏதேனும் அரசியல் தொடர்பான பிரச்சினைகளில் அவர் வீட்டின்மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மர்மநபர்களை தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: பென்சிலுக்காக இப்படியா? 8ம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு.. பள்ளிக்குள் கொலைவெறி தாக்குதல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share