Red Zone! கோவை வரும் பிரதமர் மோடி! பலத்த பாதுகாப்பு ஏற்பாடு! கேரளாவில் இன்று பிரசாரம்!
கேரளத்தில் தோ்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக கோவைக்கு பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 29) வருகை தருகிறாா்.
கேரளாவில் வரும் ஏப்ரல் 9-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 29, ஞாயிற்றுக்கிழமை) கோவைக்கு வருகை தருகிறார். கேரளாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.) வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காகவே இந்த வருகை நடைபெறுகிறது.
பாலக்காடு மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் பிரசாரத்தில் ஈடுபடும் பிரதமர் மோடி, திருச்சூரில் முன்னாள் முதல்வர் கருணாகரனின் மகள் பத்மஜா வேணுகோபாலை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார். அங்கு ரோடு ஷோவிலும் பங்கேற்கிறார்.
இதற்காக விமானம் மூலம் இன்று கோவைக்கு வரும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளாவுக்கு செல்ல உள்ளார்.
இதையும் படிங்க: இன்று வெளியாகிறது திமுக தேர்தல் அறிக்கை!! இடம்பெறும் கவர்ச்சிகர அறிவிப்புகள்!! நீளும் இலவசங்கள்!!
பிரதமரின் வருகையை முன்னிட்டு கோவையில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நீலாம்பூர், செட்டிபாளையம், எட்டிமடை, வாளையாறு, அவிநாசி சாலை, பீளமேடு, காளப்பட்டி, போத்தனூர், ஈச்சனாரி உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் சுமார் 5,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவை விமான நிலையப் பகுதியில் மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் இந்த வருகை கேரள தேர்தல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் என்.டி.ஏ. கூட்டணியின் வெற்றிக்காக அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
இதையும் படிங்க: 4 நாட்கள் மட்டுமே வாய்ப்பு!! நாளை துவங்குகிறது வேட்புமனு தாக்கல்!! பத்திக்கிச்சு தேர்தல் ஜூரம்!