×
 

ட்ரம்ப் முன்னிலையில் சீறிய மோடி! கடல்வழிப் போக்குவரத்து, மாலுமிகளைப் பாதுகாப்போம் என சூளுரை!

மூன்று இந்தியர்கள் உயிரிழந்ததை அடுத்து, டிரம்ப் முன்னிலையில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில் மாலுமிகளின் பாதுகாப்பை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

 ஓமன் அருகே நடந்த தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஜி7 உச்சிமாநாட்டில் கடல்வழி போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பை வலியுறுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, உலக நாடுகள் அனைத்தும் கடல் போக்குவரத்தை பாதுகாப்பானதாக மாற்ற வேண்டும் என்றும், மாலுமிகள் அச்சமின்றி தங்கள் பணியைச் செய்யும் சூழலை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பிரதமர் மோடி தனது உரையில், “மோதல்களுக்கு பேச்சுவார்த்தை, ராஜதந்திரம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு மூலமே தீர்வு காண முடியும் என இந்தியா உறுதியாக நம்புகிறது” என்றார். மேலும், “இந்தியா உலகத்தை ஒரே குடும்பமாகப் பார்க்கிறது. நாம் கொடையாளர்-பெறுநர் என்ற மனப்பான்மையைத் தாண்டி, சமமான பங்காளிகளாகச் செயல்பட வேண்டும். ஒருவருக்கொருவர் பக்கத்தில் நின்று உதவுவதைத் தாண்டி, ஒன்றாகப் பயணிக்க வேண்டும்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: பிரான்ஸில் தரையிறங்கிய மோடி! ராஜவரவேற்பு அளித்த மேக்ரான்! 'பாரத் இன்னோவேட்ஸ்' - இன்று துவக்கி வைப்பு!

உறவுகள் சார்பு நிலையில் இல்லாமல், கண்ணியத்துடன் இருக்க வேண்டும் என்றும், பயிற்சி, திறன் மேம்பாடு, நீர் வளம், விவசாயம் மற்றும் எரிசக்தி துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். இந்த ஒத்துழைப்புகள் உலகளாவிய சவால்களுக்கு தீர்வு காண உதவும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த உச்சிமாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, பிரேசில் அதிபர் லூலா டா சில்வா, ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்றனர்.

ஓமன் அருகே அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் மோடியின் இந்த உரை முக்கியத்துவம் பெறுகிறது. இந்திய மாலுமிகளின் பாதுகாப்புக்கு உலக நாடுகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை இந்த உச்சிமாநாடு வாயிலாக மீண்டும் வலியுறுத்தியுள்ளார் பிரதமர்.

உலக அரங்கில் இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்திய இந்த உரை, சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: இந்தியா - பிரான்ஸ் இணையும் பாரத் இன்னோவேட்ஸ் ரொம்ப முக்கியம்! 6 நாட்கள் வெளிநாடு பயணம்! மோடி அசத்தல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share