×
 

இடைவிடாத அர்ப்பணிப்பே சாதனைக்கு அச்சாரம்..! நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து..!

தடகள போட்டியில் நீண்ட தூரம் ஈட்டி எறிந்து சாதனை படைத்த நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டயமண்ட் லீக் தடகளத்தின் 16-வது சீசன் நடந்து வருகிறது. இதன் 3-வது சுற்று கத்தாரின் தோஹாவில் நடக்கிறது. இதன் நேற்றைய போட்டியில் 90 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து நீரஜ் சோப்ரா, நீண்ட தூரம் ஈட்டி எறிந்த 3வது ஆசியவீரர் என்ற பெருமை பெற்றார்.  

இந்த நிலையில் நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இடைவிடாத அர்ப்பணிப்பு, ஒழுக்கம், ஆர்வத்தின் விளைவு தான் நீரஜ் சோப்ரா இந்த சாதனையினை நிகழ்த்த காரணம் என பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். நீரஜ் சோப்ராவை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது என பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஆபரேஷன் சிந்தூர் குறித்து சர்ச்சை பேச்சு... ம.பி துணை முதல்வருக்கு பெரிய சிக்கல்!!

இதையும் படிங்க: ஆபரேஷன் சிந்தூர் பெயர் வைத்ததே இவர் தான்... உண்மையை உடைத்த ராஜ்நாத் சிங்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share