×
 

புதுவையில் பரபரப்பு! நல்ல தண்ணி கிடையாது! கேள்வி கேட்ட எதிர்கட்சி எம்எல்ஏக்கள் குண்டு கட்டாக வெளியேற்றம்...

சுகாதாரமற்ற குடிநீர் தொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பிய எதிர் கட்சி எம்எல்ஏக்கள் குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

புதுச்சேரி சட்டப்பேரவையின் ஆறாவது பட்ஜெட் கூட்டத் தொடரானது மார்ச் பத்தாம் தேதி தொடங்கி நடைபெற்று முடிந்தது. அப்போது 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட் ரூ.13,735 கோடியாக அறிவிக்கப்பட்டது. இதன் இரண்டாவது பகுதியாக இன்று காலை 9.30 மணி அளவில் சட்டப்பேரவை மீண்டும் கூடியது. 15வது சட்டமன்றத்தின் ஆறாவது கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதியாக அறிவிக்கப்பட்ட இந்த அமர்வு, முதலமைச்சர் என். ரங்கசாமி தலைமையிலான அரசின் கொள்கைகளை முன்னிலைப்படுத்தி, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு முகம் கொடுத்தது.

சபாநாயகர் ஆர். செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வு, பட்ஜெட் தொடர்பான விவாதங்களைத் தொடர்ந்து, வணிகம் எளிமைப்படுத்தல் தொடர்பான முக்கிய விவகாரங்களை மையப்படுத்துகிறது. இன்றைய அமர்வில், இந்த பட்ஜெட்டின் செயல்படுத்தல் முறைகள், சுகாதார, கல்வி மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளுக்கான ஒதுக்கீடுகள் குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற உள்ளன. மேலும், தொழில் முன்னெடுப்புகளை ஊக்குவிக்கும் வகையில், அனுமதி முறைகளை எளிமைப்படுத்தி, முதலீட்டை ஈர்க்கும் திட்டங்களை உள்ளடக்கியது.

இன்றைய பட்ஜெட் கூட்டம் தொடங்கியபோது, புதுச்சேரி முழுவதும் சுகாதாரமற்ற முறையில் குடிநீர் விநியோகிக்கப்படுவதாக கூறி எதிர்கட்சியினர் முற்றுகையிட்டுள்ளனர். அப்போது சபாநாயகர் பேச்சுவார்த்தையை ஏற்க எதிர்க்கட்சியினர் மறுத்துவிட்டதாக தெரிகிறது. 

இதையும் படிங்க: அடேங்கப்பா! சென்னைக்கு அருகே புதிய சர்வதேச நகரம்... திமுக அரசின் மாஸ்டர் பிளான்!

இதனால் புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர். எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை குண்டுகட்டாக தூக்கி வந்து காவலர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். சபாநாயகரின் உத்தரவை அடுத்து எதிர்கட்சி எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: முதல்வர் முகத்தை மூடிக்கணும்... எதுக்கு சொன்னோம் தெரியுமா? அதிமுக விமர்சனம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share