×
 

பொன்முடி வழக்கு.. எதன் அடிப்படையில முடிச்சு வச்சீங்க? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..!

பொன்முடி வழக்கின் புகார்கள் முடித்து வைக்கப்பட்டது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் பொன்முடி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியபோது, பெண்கள் குறித்தும், சைவ வைணவ மதங்கள் குறித்தும் மிகவும் கீழ்த்தரமாக பேசியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பொன்முடியிடம் இருந்த திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.

தொடர்ந்து பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என எதிர்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், அமைச்சர் பதவியில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார். 

மேலும், பொன்முடி மீது சைவம் மற்றும் வைணவம் குறித்து இழிவாகப் பேசியதாக எழுந்த சர்ச்சை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இது கருத்து சுதந்திரத்தின் கீழ் வராது என்றும், மக்கள் பிரதிநிதியாக அனைத்து மக்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பொன்முடிக்கு உள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையும் படிங்க: வழக்கறிஞரை கைது செய்தது செல்லாது! உயர்நீதிமன்றம் அதிரடி! காவல்துறைக்கு சிக்கல்!

அப்போது பொன்முடி மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன் என்றும் அவர் மீது வழக்கு பதிவு செய்யாவிட்டால் காவல்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதி எச்சரித்திருந்தார். மேலும் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது. 

இந்த நிலையில், பொன்முடிக்கு எதிராக 115 புகார்கள் பெறப்பட்ட நிலையில் 71 புகார்கள் முடித்து வைக்கப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, முடித்து வைக்கப்பட்ட புகார்கள் தொடர்பாக, சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்புகைச் சீட்டு பெறப்பட்டதா என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

மேலும், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பெறப்பட்ட புகார்கள் முடித்து வைக்கப்பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சைவ வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் இந்த ஆணை பிறப்பித்துள்ளது.

இதையும் படிங்க: நீதிமன்ற தீர்ப்பு முதல்வருக்கு சம்மட்டி அடி! இனியாச்சு புரிஞ்சுக்கோங்க.. நயினார் நாகேந்திரன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share