×
 

விஜய் எங்க வீட்டு பையன்..! MLA வெற்றிச் சான்றை பெற்ற பின் பிரேமலதா வாழ்த்து..!!

விஜய் எங்க வீட்டு பையன் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதன் முறையாக தேர்தலை சந்தித்த நிலையில் முதல் தேர்தலிலேயே வெற்றி வாகையை சூடி இருக்கிறார். எம்ஜிஆர் சாதனையையே விஜய் முறியடித்திருக்கிறார். ஒரு கோடிக்கும் அதிகமான வாக்குகளை பெற்று சாதனை புரிந்துள்ளார். பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் பிறகட்சிகளை அழைக்கும் முயற்சியில் தமிழக வெற்றிக்கழகம் ஈடுபட்டு வருகிறது.

இருப்பினும் முதல் தேர்தலிலேயே 108 இடங்களில் தமிழக வெற்றி கழகம் ஜெயித்துள்ளது. இரு பெரும் சாதனையாக பார்க்கப்பட்டு வருகிறது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு பல்வேறு அரசியல் கட்சியினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், விஜய் எங்கள் வீட்டுப்பிள்ளை அவரது வெற்றிக்கு வாழ்த்துக்கள் என்று விருதாச்சலத்தில் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

விஜய் எங்களுக்கு புதியவர் கிடையாது என்றும் பக்கத்து வீட்டில் இருந்தவர் எனவும் கேப்டனுடன் ஆரம்பம் முதலில் பழகியவர் எனவும் தெரிவித்தார். விஜய் நல்லபடியாக ஆட்சி அமைக்கட்டும் என்றும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் எனவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தருவீர்களா என்ற கேள்விக்கு நாங்கள் மதசார்பற்ற வெற்றிக் கூட்டணியில் உள்ளோம் என பதிலளித்தார்.

இதையும் படிங்க: தமிழக அரசியலில் திக்.. திக்.. நிமிடங்கள்..! எம்எல்ஏக்களுடன் விஜய் தீவிர ஆலோசனை..!!

புதிதாக ஆட்சி அமைக்கப் போகிறவர்களுக்கு எங்களது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் விருத்தாச்சலம் தொகுதியில் வென்ற திமுக பொதுச்செயலாளர் பிரேமலதா வெற்றி சான்றை பெற்றார். முதல் முறையாக சட்டப்பேரவைக்கு எம்எல்ஏவாக செல்ல இருப்பதாகவும் அங்கு விருதாச்சலம் மக்களுக்காக பேசுவேன் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆட்சி அமைக்கணும்..! எம்எல்ஏக்களுடன் தீவிர ஆலோசனை..! பனையூருக்கு புறப்பட்ட விஜய்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share