×
 

மக்கள் மீது சுமையை ஏற்றாதீங்க..! பெட்ரோல், டீசல் விலையை குறைக்க MLA பிரேமலதா வலியுறுத்தல்..!

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க MLA பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.

மேற்காசியாவில், குறிப்பாக ஈரான் தொடர்பான போர் பதற்றம் மற்றும் ஹார்முஸ் நீரிணை மூடல் போன்ற சூழல்கள் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையை கடுமையாக பாதித்துள்ளன. இதன் விளைவாக உலக அளவில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை, போர் தீவிரமடைந்த பிறகு கடும் உயர்வை சந்தித்துள்ளது. இந்தியா போன்ற எண்ணெய் இறக்குமதி சார்ந்த நாடுகளுக்கு இது பெரும் சவாலாக மாறியுள்ளது. இந்தியா உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் நுகர்வு நாடு மற்றும் தனது தேவையில் சுமார் 85 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. மேற்காசிய நாடுகளில் இருந்து வரும் இந்த இறக்குமதி ஹார்முஸ் நீரிணை வழியாகத்தான் நடைபெறுகிறது.

போர் சூழலால் இந்த வழித்தடம் பாதிக்கப்பட்டதால், விநியோகத் தடைகள் ஏற்பட்டு விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிவிட்டது. பெட்ரோல், டீசல் என்பது போக்குவரத்து, சரக்கு ஏற்றுமதி, விவசாயம் மற்றும் தொழில்துறை ஆகியவற்றின் முக்கிய எரிபொருள். அதன் விலை உயர்ந்தால், பால், காய்கறி, பழங்கள், தானியங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் கொண்டு செல்லும் செலவு அதிகரிக்கும். 

இதையும் படிங்க: மகனுக்காக களம் இறங்கிய பிரேமலதா..!! விருதுநகரில் சூறாவளி பிரச்சாரம்..!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருக்கிறது. பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வு மக்களை கடும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளது என MLA பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.இந்நிலை தொடர்ந்து நீடித்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை, அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்றும் கூறியுள்ளார். மக்கள் மீது ஏற்பட்டுள்ள பொருளாதார சுமையை குறைக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சட்டமன்ற உறுப்பினரும் தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். 

இதையும் படிங்க: மன்னிச்சிடுங்க..! தெரிஞ்சு பண்ணல... மாற்றுத்திறனாளிகள் சர்ச்சைக்கு மன்னிப்பு கேட்ட அமைச்சர் கீர்த்தனா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share