×
 

30 ஆண்டுகளுக்குப் பிறகு ருமேனியா செல்லும் இந்திய ஜனாதிபதி! வரலாறு படைக்கும் திரவுபதி முர்மு!

இந்தியாவின் ஜனாதிபதி திரவுபதி முர்மு, வரும் 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை மால்டோவா, வடக்கு மாசிடோனியா மற்றும் ருமேனியா ஆகிய 3 நாடுகளுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இந்தியாவின் ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஜூலை 19 முதல் 25-ஆம் தேதி வரை மால்டோவா, வடக்கு மாசிடோனியா மற்றும் ருமேனியா ஆகிய மூன்று ஐரோப்பிய நாடுகளுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இந்த பயணம் இந்தியாவின் வெளிநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் முக்கியமான ராஜதந்திர நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடனான இந்தியாவின் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் இந்த சுற்றுப்பயணம் அமைந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முதல்கட்டமாக, மால்டோவா அதிபர் மாயா சாண்டுவின் அழைப்பின் பேரில், ஜூலை 20-ஆம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு அந்நாட்டுக்கு செல்கிறார். அப்போது மால்டோவா அதிபருடன் இருதரப்பு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. மேலும், மால்டோவா நாடாளுமன்ற தலைவர் இகோர் குரோசுவை சந்தித்து கருத்துகளை பரிமாறிக்கொள்ள உள்ளார்.

இதையும் படிங்க: வடகிழக்கு இந்தியா முன்னேற்றத்திற்கான நுழைவு வாயில்! பிரதமர் மோடி பெருமிதம்! ரூ.47,600 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல்!

அதன்பின்னர், மால்டோவா–இந்தியா நாடாளுமன்ற நட்புறவுக் குழு உறுப்பினர்களை சந்திக்கும் ஜனாதிபதி, அங்கு நடைபெறும் வர்த்தக மன்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்று உரையாற்ற உள்ளார். மால்டோவாவில் வாழும் இந்திய சமூகத்தினரையும் சந்தித்து கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வடக்கு மாசிடோனியா அதிபர் கோர்டானா சில்ஜனோவ்ஸ்கா-டாவ்கோவாவின் அழைப்பின் பேரில், ஜூலை 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் ஜனாதிபதி முர்மு அந்த நாட்டுக்கு செல்கிறார். இந்திய ஜனாதிபதி ஒருவர் மால்டோவா மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகளுக்கு மேற்கொள்ளும் முதல் அரசுமுறை பயணம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதிக்கட்டமாக, ருமேனியா அதிபர் நிகுசோர் டானின் அழைப்பின் பேரில், ஜூலை 23 முதல் 25 வரை ஜனாதிபதி முர்மு ருமேனியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஜனாதிபதி ஒருவர் ருமேனியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்வதும் சிறப்பம்சமாகும். இந்த மூன்று நாடுகளுக்கான பயணம், இந்தியாவின் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதுடன், கிழக்கு ஐரோப்பிய பிராந்தியத்தில் இந்தியாவின் ராஜதந்திர முக்கியத்துவத்தையும் மேலும் உயர்த்தும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பள்ளி மாணவிக்கு லிப்ட் கொடுத்து பாலியல் வன்கொடுமை! வனப்பகுதிக்குள் நடந்த கொடூரம்! ஆந்திராவில் பரபரப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share