×
 

ஈரான் செய்யுறது ரொம்ப பெரிய துரோகம்! இப்பிடி பண்ணுவாங்கனு நினைக்கல! கத்தார் பிரதமர் காட்டம்!!

தன் அண்டை நாடுகள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள், ஒரு ஆபத்தான தவறான கணக்கீடு மற்றும் பெரிய துரோகம் என கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் கடும் கண்டம் தெரிவித்துள்ளார்.

தன் அண்டை நாடுகள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள், ஒரு ஆபத்தான தவறான கணக்கீடு மற்றும் பெரிய துரோகம் என கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் கடும் கண்டம் தெரிவித்துள்ளார்.

கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி, ஈரான் தன் அண்டை நாடுகள் மீது நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை "ஆபத்தான தவறான கணக்கீடு" மற்றும் "பெரிய துரோகம்" என்று கடுமையாக கண்டித்துள்ளார். 

அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் மேற்காசியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், கத்தார் உள்ளிட்ட பல நாடுகளின் உட்கட்டமைப்பு மற்றும் குடியிருப்பு பகுதிகள் சேதமடைந்துள்ளன. இதனால் பிராந்தியத்தில் பதற்றம் உச்சத்தை தொட்டுள்ளது.

இதையும் படிங்க: மத்திய கிழக்கில் போர் பதற்றம்! இந்தியாவுக்கு பாதிப்பு?! டெல்லியில் மோடி தலைமையில் அவசர ஆலோசனை!

ஸ்கை நியூஸ் உடனான பிரத்யேக நேர்காணலில் பேசிய கத்தார் பிரதமர், "எங்கள் அண்டை நாடுகளுக்கு எதிரான எந்தப் போரிலும் நாங்கள் பங்கேற்க மாட்டோம் என்று ஏற்கனவே தெளிவுபடுத்தியிருக்கிறோம். 

ஈரானிடமிருந்து இத்தகைய தாக்குதல்களை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் எப்போதும் அவர்களுடன் நல்லுறவை பேண முயன்றோம். ஆனால் அவர்கள் கூறும் காரணங்களும் நியாயங்களும் முற்றிலும் நிராகரிக்கத்தக்கவை" என்று கூறினார்.

மேலும், "ஈரான் அமெரிக்க ராணுவ இலக்குகளை மட்டுமே தாக்குவதாக கூறுவது ஏற்க முடியாது. இதுவரை நடந்த தாக்குதல்களில் 25 சதவீதம் மக்கள் வசிக்கும் பகுதிகளில் நடந்துள்ளன. இதற்கும் போருக்கும் என்ன சம்பந்தம்? அவர்கள் எதை அடைய விரும்புகிறார்கள்? அதிக ராணுவ நடவடிக்கைகள் நிலைமையை மேலும் மோசமாக்கும். 

எனவே பேச்சுவார்த்தை மூலம் நல்ல தீர்வு காண வேண்டியது அவசியம். நாங்கள் தொடர்ந்து பதற்றத்தை தணிக்க முயற்சிப்போம். அவர்கள் எங்கள் அண்டை நாடு" என்று வலியுறுத்தினார்.

ஈரானின் தாக்குதல்கள் கத்தார் உட்பட குவைத், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளையும் பாதித்துள்ளன. கத்தார் தனது பாதுகாப்பு படைகள் தொழில்முறை ரீதியாக செயல்பட்டதாக பிரதமர் பாராட்டினார். 

ஈரானின் இந்த நடவடிக்கை "பெரிய துரோக உணர்வை" ஏற்படுத்தியுள்ளதாகவும், "அண்டை நாடுகளை தாக்கியது எல்லாவற்றையும் அழித்துவிட்டது" என்றும் அவர் விமர்சித்தார். கத்தார் தொடர்ந்து அமைதி முயற்சிகளில் ஈடுபடும் என்றும், அனைத்து தரப்பினரும் பதற்றத்தை குறைக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

இருப்பினும், ஈரான் தரப்பில் தாக்குதல்கள் அமெரிக்க இலக்குகளை மட்டுமே நோக்கமாகக் கொண்டவை என்று கூறி வருகிறது. ஆனால் கத்தார் உள்ளிட்ட நாடுகள் இதை ஏற்க மறுத்து, தங்கள் இறையாண்மை மீதான தாக்குதல் என்று கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த விவகாரம் மேற்காசியாவில் போர் விரிவடைவதற்கான அபாயத்தை அதிகரித்துள்ளது. உலக நாடுகள் எண்ணெய் விநியோகம், பொருளாதார தாக்கம் ஆகியவற்றை கண்காணித்து வருகின்றன.

இதையும் படிங்க: ஈரான் போரை எப்போ முடிக்கலாம்?! இஸ்ரேல் பிரதமர், அமெரிக்க அதிபர் பேச்சு?! வருமா போர்நிறுத்தம்?!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share