×
 

S.I R. சட்டவிரோதம்... மக்களவையில் ராகுல் காந்தி ஃபயர் ஸ்பீச்...!

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக மக்களவையில் ராகுல் காந்தி உரையாற்றினார்.

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இறந்தவர்கள், மாற்று இடத்திற்கு சென்றவர்கள், புதியவர்கள் என பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு பெயர் திருத்தம், முகவரி மாற்றம் என திருத்தப் பணிகள் நடைபெறுவது வழக்கம். 

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்கின்றன. காரணம் தேர்தல் ஆணையம் பாஜக அரசுக்கு துணையாக செயல்படுவதாகவும் வாக்காளர் திருத்த பணிகள் மூலம் பொதுமக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் என்ற குற்றம் சாட்டி வருகின்றனர். அது மட்டுமல்ல அது வாக்குத்திருட்டு நடைபெற்று இருப்பதாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டு பேசி வருகிறார்.

எஸ் ஐ ஆர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்பது சட்டவிரோதமானது என்றும் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார். ஒவ்வொரு இந்தியரின் வாக்குகளையும் சேர்த்து பின்னப்பட்டது தான் இந்தியா என்று தெரிவித்தார். இந்தியாவின் அனைத்து அமைப்புகளையும் ஆர்எஸ்எஸ் கைப்பற்றி வருகிறது என்று குற்றம் சாட்டினார். 150 கோடி மக்களால் பிண்ணப்பட்ட துணி தான் நமது இந்தியா என தெரிவித்தார்.

இதையும் படிங்க: புதினை சந்திக்க அனுமதி மறுப்பு.. ராகுல் காந்தி கடும் விமர்சனம்..!!

பட்டாடையில் இருந்து நூலை எடுத்து விட்டால் ஒன்றும் இல்லை எனவும் காஞ்சிபுரம் பட்டை மேற்கோள்காட்டி மக்களவையில் ராகுல் காந்தி பேசினார். காந்தியைக் கொன்ற பின்னர் இந்தியாவின் அரசு நிறுவனங்களை ஆர்எஸ்எஸ் கைப்பற்றி வருகிறது என்ற குற்றம் சாட்டினார். வாக்காளர் சிறப்பு திருத்தம் என்பது சட்டவிரோதமானது உடனடியாக அதனை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை உள்ளது எனவும் கூறினார். 

இதையும் படிங்க: அதிரும் அரசியல் களம்... காங்கிரஸில் இணைய முடிவெடுத்த விஜய்... சீக்ரெட் மீட்டிங் உண்மையை போட்டுடைத்த ஜோதிமணி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share