அடக்கொடுமையே..! +2 மாணவியை கர்ப்பமாக்கிய கொடூரன்..! மதுரையை உலுக்கும் சம்பவம்..!
மதுரையில் பிளஸ் டூ மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பம் ஆக்கிய நபர் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டத்தில் 12ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாக்கிய நபர் போக்சோ வில் கைது செய்யப்பட்டார். மதுரை மேற்குத் தொகுதி 5 நாட்களில் 3 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டம் பரவை அருகே பவர் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த முத்துமணி என்பவர், அப்பகுதியை சேர்ந்த 12-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவருக்குப் தொடர் பாலியல் தொல்லை அளித்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அந்த மாணவி தற்போது ஏழு மாத கர்ப்பிணியாக இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு நிலையில் முத்து மணி போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தத் தகவல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மதுரை மேற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 5 நாட்களில், பெண் குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு எதிராகத் தொடர்ந்து நடைபெற்ற பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் ஒட்டுமொத்த மாவட்டத்தையுமே உலுக்கியுள்ளன.
இதையும் படிங்க: மகளை பாலியல் வன்கொடுமை செய்து சீரழித்த தந்தை! தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிய ஐகோர்ட்!
சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் அளித்த புகார்களின் அடிப்படையில் மூன்று தனித்தனி போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே, நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த துரைப்பாண்டி என்பவர், எட்டு வயது சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். அதற்கு அடுத்து கீழமாத்தூர் பகுதியில், 10-ம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவிக்குத் தொடர்ச்சியாகப் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக, தமிழக வெற்றி கழகம் நிர்வாகி கண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக பரவை பவர் ஹவுஸ் பகுதியை சேர்ந்த முத்து மணி என்பவர் 12 வகுப்பு மாணவிக்கு தொடர் பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். பள்ளி மாணவி ஒருவர் கர்ப்பமடைந்திருப்பது காவல்துறை மற்றும் சமூக நல ஆர்வலர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்கு விரைவாகத் தண்டனை பெற்றுத்தரவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி பெற்றோர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் ஒன்றரை கிலோ தங்கம் கொள்ளை...! 5 பேரை தட்டி தூக்கிய போலீஸ்..! தீவிர விசாரணை..!