உண்மையில் நீங்கள் இந்தியரா? ராகுல்காந்தியை வெளுத்து வாங்கிய சுப்ரீம் கோர்ட்..!
சீனா விவகாரம் தொடர்பாக ராகுல் எழுப்பிய சந்தேகங்களுக்கு சுப்ரீம் கோர்ட் கடுமையான கேள்விகளை எழுப்பி உள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினை பத்தி பேசினது பெரிய சர்ச்சையை கிளப்பியிருக்கு. இப்போ உச்சநீதிமன்றமே அவரை கடுமையா கேள்வி கேட்டு, “நீங்க உண்மையான இந்தியரா?”னு வெளுத்து வாங்கியிருக்கு
2022-ல ராகுலோட பாரத் ஜோடோ யாத்ராவின்போது, “சீன படைகள் அருணாச்சல பிரதேசத்துல இந்திய ராணுவ வீரர்களை தாக்குறாங்க. 2,000 சதுர கிலோமீட்டர் இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமிச்சிருக்கு”னு பேசினார்.
இது இந்திய ராணுவத்தை அவதூறு பண்ணுற மாதிரி இருக்குனு, ஓய்வு பெற்ற பார்டர் ரோட்ஸ் ஆர்கனைசேஷன் டைரக்டர் உதய் ஷங்கர் ஸ்ரீவஸ்தவா, லக்னோவுல ஒரு அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குல லக்னோ கோர்ட், ராகுலுக்கு எதிரா சம்மன் அனுப்பிச்சு. இதை எதிர்த்து ராகுல் உச்சநீதிமன்றத்துல மனு தாக்கல் பண்ணார். ஆகஸ்ட் 4, 2025-ல இந்த மனு மீது விசாரணை நடந்துச்சு.
இதையும் படிங்க: மோடி பிரதமரா ஆகியிருக்கவே முடியாது! நாங்கள் தோற்கவில்லை, அழிக்கப்பட்டோம் என ராகுல் வேதனை..!
நீதிபதிகள் தீபாங்கர் தத்தா மற்றும் ஆகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் தலைமையிலான பெஞ்ச், ராகுலை கடுமையா கேள்வி கேட்டு தாக்கு தாக்குனாங்க. “நீங்க எதிர்க்கட்சி தலைவரா இருக்கீங்க, இப்படி சமூக வலைதளங்கள்ல இந்த மாதிரி பேச்சு பேசுறது சரியா? இதை பார்லிமென்ட்டுல எழுப்ப வேண்டியது இல்லையா?”னு ஆரம்பிச்சாங்க.
“2,000 சதுர கிலோமீட்டர் சீனா ஆக்கிரமிச்சதா எப்படி சொல்றீங்க? நீங்க அங்க இருந்தீங்களா? உங்களுக்கு நம்பகமான ஆதாரம் இருக்கா? உண்மையான இந்தியரா இருந்தா இப்படி பேச மாட்டீங்க”னு கோர்ட் கேட்டு, ராகுலோட பேச்சை கண்டிச்சது. “கருத்து சுதந்திரம்னு எதையும் பேசிடக் கூடாது. இந்த மாதிரி பொறுப்பற்ற பேச்சு, எல்லை மோதல் நேரத்துல பேசுறது சரியா?”னு நீதிபதிகள் கேள்வி மேல கேள்வி வைச்சாங்க.
ராகுலோட வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, “எதிர்க்கட்சி தலைவரா இப்படி பிரச்சினைகளை எழுப்ப முடியலைன்னா, அது தவறு. இந்த பேச்சு அரசியல் உள்நோக்கத்தோட தாக்கல் செய்யப்பட்ட வழக்கு”னு வாதாடினார். ஆனா, நீதிபதிகள், “பார்லிமென்ட்டுல பேசுங்க, சோஷியல் மீடியாவுல இப்படி பேச வேண்டாம்”னு அறிவுரை சொல்லி, “இப்படி பொறுப்பற்ற பேச்சு தேச பாதுகாப்புக்கு நல்லதில்லை”னு எச்சரிச்சாங்க. இருந்தாலும், ராகுலுக்கு ஆதரவா, லக்னோ கோர்ட்டோட விசாரணைக்கு இடைக்கால தடை விதிச்சு, உத்தரபிரதேச அரசுக்கும், புகாரளித்தவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டாங்க.
இந்த விவகாரத்துக்கு பாஜக முழு ஆதரவு தந்து, “ராகுல் பொறுப்பில்லாம பேசி, சீனாவோட கூட்டு சேர்ந்து இந்தியாவை குறை சொல்றார்”னு குற்றம்சாட்டுது. மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, “சீனா ஒரு இன்ச் நிலத்தை கூட ஆக்கிரமிக்கலை”னு X-ல பதிவு போட்டு, ராகுலோட கூற்றை மறுத்திருக்கார். ஆனா, ராகுல், “சீனா இந்திய நிலத்தை ஆக்கிரமிச்சிருக்கு, அரசு இதை மறைக்குது”னு தொடர்ந்து சொல்லி, பார்லிமென்ட்டுலயும் இதை எழுப்பியிருக்கார்.
இந்த சர்ச்சை, இந்தியா-சீனா எல்லை மோதல் பத்தின உண்மை நிலவரத்தை மறுபடியும் விவாதத்துக்கு கொண்டு வந்திருக்கு.
இதையும் படிங்க: அருண் ஜெட்லி என்னை மிரட்டுனாரு!! ராகுல்காந்தி குற்றச்சாட்டுக்கு ரோகன் ஜெட்லி பதில்!