×
 

முதல்வருக்கு தூக்கமே இல்ல..! குறைகள் தீர்க்கப்படும்.. அமைச்சர் ஆதவ் உறுதி..!!

தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருவதால் முதல்வர் விஜய்க்கு தூக்கமே இல்லை என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

சென்னை ரிப்பன் மாளிகை வெளியே ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் தீவிரமடைந்தது. சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்த தினசரி ஊதியம் ரூ.832 என்ற அளவை செயல்படுத்த வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் ரிப்பன் மாளிகை முன் திரண்டனர்.

தற்போது அவர்கள் பெறும் தினக்கூலி சுமார் ரூ.751 முதல் ரூ.762 வரை உள்ளது. இதை உயர்த்தி, மாத ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்பதே அவர்களின் முதன்மையான கோரிக்கை. பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் இவர்கள், ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்தவர்களுக்கு பணி நிரந்தரம் அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் வாக்குறுதியாக அளித்த இந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கையில் அடங்கியுள்ளது.

கடந்த 15 நாட்களுக்கும் மேலாக போராடிவரும் தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர்கள் என்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், ராஜ்மோகன், சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தூய்மை பணியாளர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் அமர்ந்து வருந்துவதால் முதல்வர் விஜய்க்கு தூக்கம் வருவதில்லை என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சாம்பாரில் சாணி பவுடர்..! பள்ளிகளில் தீவிர கண்காணிப்பு தேவை... எச்சரிக்கும் வானதி சீனிவாசன்.!!

போராடிய தூய்மை பணியாளர்களை திமுக ஆட்சி கைது செய்தது; தற்போதைய முதல்வர் விஜய் ஒருவர் மீதும் கை வைக்க கூடாது என கூறியுள்ளார். ஆட்சி அமைத்து 100 நாள்தான் ஆகிறது என்றும் எங்களுக்கு அவகாசம் தாருங்கள் எனவும் கேட்டுக் கொண்டார் . உங்களை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் சென்னை ரிப்பன் மாளிகையில் போராடிய தூய்மை பணியாளர்களிடம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். 

இதையும் படிங்க: ரூ.1200 கோடியில் பிரம்மாண்டம்... சென்னையில் புதிய தலைமைச் செயலக கட்டிடம் இந்த 3 இடங்களில் எங்கு அமைய வாய்ப்பு?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share