×
 

மோடியும், அமித் ஷாவும் ஆட்டுவிக்கிற பொம்மை தேர்தல் ஆணையம்... சண்முகம் பகிரங்க குற்றச்சாட்டு...!

மோடியும் அமித் ஷாவும் ஆட்டு விக்கிற பொம்மையாக தேர்தல் ஆணையம் இருக்கிறது என சண்முகம் விமர்சித்தார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்கின்றன. காரணம் தேர்தல் ஆணையம் பாஜக அரசுக்கு துணையாக செயல்படுவதாகவும் வாக்காளர் திருத்த பணிகள் மூலம் பொதுமக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் என்ற குற்றம் சாட்டி வருகின்றனர். இருப்பினும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நிச்சயம் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் நடத்தப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இதனை உறுதிப்படுத்தினார். பீகாரைத் தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடைபெற உள்ளதாக தெரிவித்தார். 

அதன்படி கேரளா, மேற்கு வங்கம், குஜராத், சத்தீஸ்கர், கோவா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இன்று முதல் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாம் நடைபெறுகிறது. 51 கோடி வாக்காளர்களை சரிபார்க்கும் பணிகளைத் தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.

இதையும் படிங்க: வேண்டவே வேண்டாம்... SIR- க்கு வலுக்கும் எதிர்ப்பு... திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்...!

வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளை எதிர்த்து திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன. சென்னை மின்ட் பகுதியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் உரையாற்றினார். மோடி, அமித் ஷா ட்டு விக்கிற பொம்மையாக தேர்தல் ஆணையம் மாறி உள்ளது எனக் குற்றம் சாட்டினார். பாஜகவிற்கு ஒத்து ஊதும் நிலையில்தான் தேர்தல் ஆணையம் உள்ளதாக தெரிவித்தார். ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுவதை ஏற்க முடியாது என்ற திட்டவட்டமாக தெரிவித்தார். 

இதையும் படிங்க: சூடு பிடிக்கும் SIR பணிகள்... ஒரே இடத்தில் கூடிய தென் மாவட்ட ஆட்சியர்கள்... தேர்தல் அதிகாரிகள் தீவிர ஆலோசனை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share