திமுக GEN Z நிர்வாகி கைது ரத்து..! அதிகாலையில் ARREST.. அதிரடி திருப்பம்..!
திமுக செயற்பாட்டாளர் சரண் ராஜ் கைது ரத்து செய்யப்பட்டது.
தமிழக அரசியலில் திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், திமுகவின் ஜென் ஜி அணியைச் சேர்ந்த முக்கிய செயற்பாட்டாளரும், சமூக ஊடக Influencer-ஆன ஆர்ஜே சரண் ஜெயராமன் மீது பதிவான அவதூறு வழக்கில் அவரது கைது உடனடியாக ரத்து செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு தமிழக அரசியல் களத்தில் எதிர்க்கட்சியினருக்கு எதிரான அடக்குமுறை என்ற குற்றச்சாட்டுகளை மீண்டும் எழுப்பியுள்ளது.
சரண் ஜெயராமன் தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர். அவர் திமுகவின் இளைஞர் மற்றும் ஜென் ஜி அணியில் தீவிரமாக செயல்பட்டு வருபவர். கடந்த சில வாரங்களாக சமூக ஊடகங்களில் தவெக அரசின் நடவடிக்கைகள், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மற்றும் அமைச்சர்கள் குறித்த விமர்சனங்களை வீடியோ வடிவில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். குறிப்பாக, அமைச்சர் டி. சரத்குமார் தொடர்பான ஒரு சர்ச்சைக்குரிய வீடியோவை பகிர்ந்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. அந்த வீடியோ தொடர்பாக தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் அவர் தாம்பரம் காவல் நிலையத்திலும், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், தவெகவைச் சேர்ந்த லூது சகாயமரி என்ற பெண் நிர்வாகி, சரண் ஜெயராமன் தனது வீடியோக்களை தவறாக பயன்படுத்தி உருவக் கேலி, ஆபாசமான கருத்துகள் மற்றும் அச்சுறுத்தல் தொனியில் பதிவுகள் வெளியிட்டதாகக் கூறி கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் பெண்களுக்கு எதிரான அவதூறு, அச்சுறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் தாம்பரத்தில் இருந்த அவரது இல்லத்தில் இருந்து போலீசார் அவரை கைது செய்தனர். இந்த அதிரடி நடவடிக்கை திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: விஜயபாஸ்கரை வைத்து பேரம்... திமுக MLA- க்களுக்கு குறி... R.S.பாரதி குற்றச்சாட்டு..!!
கைது செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே, திமுக தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. இது அரசியல் பழிவாங்கல் என்றும், சமூக ஊடகத்தில் எதிர்க்கட்சியினரின் குரலை நசுக்கும் முயற்சி என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. திமுகவின் முக்கிய தலைவர்கள் மற்றும் ஜென் ஜி அணி செயற்பாட்டாளர்கள் இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டித்து, உடனடி விடுதலைக்கு வலியுறுத்தினர். இந்த அழுத்தங்கள் மற்றும் சட்டரீதியான பரிசீலனைகளுக்குப் பிறகு, சரண் ஜெயராமனின் கைது ரத்து செய்யப்பட்டது.
இதையும் படிங்க: "ஓயாத பஞ்சாயத்து"..! ஆளுநரிடம் முறையிட்ட திமுக.. வரிசைக் கட்டி வந்த அதிமுக..!