ஒன்னு போட்டா ரெண்டு... சதுரங்க வேட்டை பட பாணியில் ரூ.69 லட்சம் மோசடி... தாய், மகனை தட்டித்தூக்கிய போலீஸ்...!
திருப்பத்தூரில் லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்ட தாய் மகன் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த ஐயனூர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் வேலூர் கலால் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். அவரது மகன் நித்திஷ் (25) என்பவர் பட்ட படிப்பு முடித்து விட்டு பணம் சம்பாதிப்பது எப்படி என்று சமூக வலைத்தளத்தில் கற்று கொண்டு உடன் படித்த நண்பர்கள், உறவினர்கள் என பலரிடம் நட்பாக பழகியுள்ளார். அவர்களுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தகவல் பரிமாறி கொண்டு கிரிப்டோ கரன்சி, டிரேடிங், ஷேர் மார்க்கெட் என்று பல விதமான பெயர்களை பயன்படுத்தி 1 போட்டால் 2 கிடைக்கும் பணத்தை என்னிடம் முதலீடு செய்யுங்கள் என்று பலரிடம் ஆசை வார்த்தை கூறி உடன் படித்த நண்பர்கள் முதல் உறவினர்கள் வரை பலரிடம் பல பொய்கள் சொல்லி எப்படி எல்லாம் ஏமாற்ற முடியுமோ அப்படி எல்லாம் ஏமாற்ற வேலை செய்து பண மோசடியில் ஈடுபட்டு உள்ளார்.
“அப்பா இன்ஸ்பெக்டர் என்பதால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது, நம்பி பணத்தை முதலீடு செய்யுங்கள்” என்றும் சிலரிடம் நம்பகத்தன்மையோடு பேசிய காரணத்தினால் அதை நம்பி பலரும் பணத்தை முதலீடு என்ற பெயரில் நித்திஷிடம் பணம் கொடுத்து உள்ளனர்.
அதே போன்று கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் படிக்கும் போது பழக்கம் ஆன சந்தோஷ்குமார் அவர்களது நண்பர்களான விக்னேஷ், வித்யா சாகர், பிரேம்குமார் உள்ளிட்ட மூன்று நபர்களிடம் நிதீஷ்குமார் ஆன்லைனில் டிரேடிங் செய்தால் அதிக பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தைக்கூறி அந்த தரப்பிடம் சுமார் 69 லட்ச ரூபாயை நித்திஷ் மோசடி செய்துள்ளார்.
இதையும் படிங்க: காஷ்மீர் பிரச்னையில தலையிட மாட்டோம்! இந்தியா - பாக்., பேசி தீர்த்துக்கோங்க! ஒதுங்கியது அமெரிக்கா!
பணம் கட்டி யாமாற்றம் அடைந்த திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த மணிவேல் மகன் சந்தோஷ்குமார் (25) என்பவர் திருப்பத்தூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் மாவட்ட குற்ற பிரிவு போலிசார் விசாரணையை தொடங்கிய நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பட்டப்படிப்பு படித்த நிதிஷ்குமார் டெல்லிக்கு சென்று யூ.பி.எஸ்.இ தேர்வு எழுத ஆயத்தம் ஆகி உள்ளார். அங்கு அவருக்கு கேரள மாநிலத்தை சேர்ந்த அஞ்சனா என்ற பெண் பழக்கம் ஆகி இருவரும் காதலித்து வரும் நிலையில் காதலிக்கு பண மழை கொட்டும் அலுவலகமாக Galaxy Trade கம்பெனி என்று ஆரம்பித்து அதற்கு எம்.டி யாக அமர வைத்து அழகு பார்த்து அவருடன் சேர்ந்து புதிய வாடிக்கையாளர்களை இந்த கம்பெனியில் முதலீடு செய்யுங்கள் என்று பல லட்சம் பணத்தை முதலீடு செய்ய தனது உடன் படித்த நபர்களை நிதிஷ் தூண்டி உள்ளார்.
அதனை நம்பி அவர்களும் பணத்தை போட்டு உள்ளனர். பின்னர் 1 வருட காலம் கடந்தும் எந்த பணமும் திரும்ப கிடைக்காத காரணத்தினால், ஏமாற்றம் அடைந்த நபர்கள் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் நிதிஷ் குமாரை மாவட்ட குற்ற பிரிவு போலிசார் நிதிஷ்குமாரை தேடி வியாழக்கிழமை காலையில் ஆம்பூரில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அப்போது நிதிஷ் குமார் வீட்டில் இல்லாமல் ஏற்கனவே மோசடி வழக்கு சம்மந்தமாக நிலுவையில் உள்ள வழக்கு சம்மந்தமாக சென்னையில் உள்ள நீதிமன்றத்திற்கு சென்றதாக தெரிகிறது. இந்த வழக்கில் அவரது தாயாருக்கும் சம்பந்தம் இருப்பதால் அவரையும் விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்று உள்ளனர். போலீஸ் விசாரணை நடத்துவதை சமாளிக்க மாலதி மயங்கி விழுந்து உள்ளார்.
இதனால் உடனடியாக அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு அவருக்கு சிகிச்சை அளித்து பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி தாய் மாலதி மற்றும் மகன் நிதிஷ்குமாரை போலிசார் கைது செய்து 69 லட்சம் மோசடி செய்த குற்றத்திற்காக சிறையில் அடைத்தனர்.
மேலும் நிதிஷ் குமாரின் காதலிக்கு வலை விரித்து தேடி வருகின்றனர். அதே போன்று இன்ஸ்பெக்டர் இதற்கு உடந்தையாக இருக்க கூடுமோ என்று போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இடியட்-னு தேடுனா ட்ரம்ப் வர்றது ஏன்? கூகுள் தேடலில் சங்கடம்! சுந்தர்பிச்சை விளக்கம்!