×
 

#BREAKING: நாகை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு விடுமுறை... முழு விவரம்...!

நாகை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

டிட்வா புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐந்து மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. நான்கு மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, அரியலூர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடலூர், அரியலூர், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை நான்கு மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. புதுச்சேரியிலும் நாளை அதி கனமழை கொட்டும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அதிக மழைப்பொழிவு இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கனமழை எச்சரிக்கை... தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு... ஊரக திறனாய்வுத் தேர்வு தேதி மாற்றம்...

கனமழை எச்சரிக்கை காரணமாக நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கனமழையின் காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: கனமழை எச்சரிக்கை... எல்லாம் ரெடி! NO PROBLEM... முதல்வர் ஸ்டாலின் பேட்டி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share