×
 

விஜயை முதலமைச்சராக்க உயிர் மூச்சு உள்ளவரை பணியாற்றுவேன்… செங்கோட்டையன் திட்டவட்டம்..!

விஜய்யை முதல்வராக உயிர் மூச்சு உள்ளவரை பணியாற்றுவேன் என செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழக அரசியலில் புதிய அலை என்று அழைக்கப்படும் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக உள்ளார். தனது கட்சியை முன்னிலைப்படுத்தி 2026 இல் முதல்வர் அரியணையில் ஏறுவதை நோக்கமாகக் கொண்டு களமாடி வருகிறார். விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்து இளைய சமுதாயத்தின் வரவேற்பு அதிகளவு இருந்தது. திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்கு மாற்றாக விஜய் இருப்பார் என்று சொல்லப்பட்டது. ஏற்கனவே விஜய்க்கு முறையான வழிகாட்டுதல் கொடுக்க அனுபவம் வாய்ந்த நபர்கள் இல்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

விஜயின் தேர்தல் திட்டமிடுதலில் குறைபாடுகள் இருப்பதாகவும் அரசியல் அனுபவசாலிகள் யாரும் இல்லாததால் தான் இது போன்ற குறைபாடுகள் ஏற்படுவதாகவும் விமர்சிக்கப்பட்டது. இதற்கெல்லாம் பதில் கொடுத்தும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. 

அதிமுகவின் முக்கிய முகமாக அறியப்பட்ட செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தின் இணைந்தார். அவருக்கு கட்சி பொறுப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில் செங்கோட்டையன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஆண்டுக்கு ரூ.500 கோடி வருவாயை, தூக்கி எறிந்துவிட்டு, மக்களுக்கு சேவை செய்வதற்காக புனித ஆட்சியை தருவதற்கு விஜய் வந்துள்ளார் என்று தெரிவித்தார். த.வெ.க.வில் இணைந்த பிறகு கோவைக்கு இன்று வருகை தந்த செங்கோட்டையன் இவ்வாறு கூறினார்.

இதையும் படிங்க: “ஆண்டவனே வந்தாலும் நடக்காது”... செங்கோட்டையன் தவெகவில் இணைய காரணம் இதுதான்... திமுக முக்கிய புள்ளி சொன்ன தகவல்...!

ஜெயலலிதா இருந்தவரை தமிழ்நாட்டில் புனிதமான ஆட்சி நடைபெற்றதாக அவர் கூறினார். விஜயை முதலமைச்சராக்க உயிர் மூச்சு உள்ள வரை பணியாற்றுவேன் என்றும் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகே செங்கோட்டையன் அமைச்சராக பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "இந்த புத்தி நேற்று வரைக்கும் எங்க போச்சு...." - வார்த்தையை விட்ட செங்கோட்டையனை வச்சி செய்த அமைச்சர் ரகுபதி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share