×
 

செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளர்கள் திடீர் பல்டி... முக்கிய புள்ளியைச் சந்திக்க சாரை சாரையாய் வாகனங்களில் பயணம்...!

செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளர்கள் திடீர் பல்டி அடித்துள்ளது அதிமுகவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளர்களான பண்ணாரி எம்எல்ஏ, முன்னாள் எம்பி காளியப்பன் ஆகியோர் ஏராளமான தொண்டர்களுடன் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் புதிய மாவட்ட செயலாளரை சந்திக்க புறப்பட்டுச் சென்றனர். 

முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கட்சி பதவிகள் பறிக்கப்பட்ட பின்னர், அவரது தீவிர ஆதரவாளர்களாக இதுவரை செயல்பட்டு வந்த முன்னாள் எம்பி காளியப்பன், பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி, சத்தி நகர செயலாளர் சுப்பிரமணியம், ஒன்றிய செயலாளர் சிவராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் இன்று 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஏராளமான தொண்டர்களுடன் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் ஏ.கே. செல்வராஜை சந்திக்க புறப்பட்டு சென்றனர். 

கடந்த 4-ம் தேதி நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பண்ணாரி எம்எல்ஏ, தற்போது செங்கோட்டையன் கட்சி பதவி பறிக்கப்பட்ட பின்னர், தனது நிலையை மாற்றிக் கொண்டு தற்போது எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: #BREAKING எடப்பாடியால் தொலைந்த மன நிம்மதி... செங்கோட்டையன் எடுத்த திடீர் முடிவு... அதிரும் அதிமுக...!

அதேபோல தீவிர ஆதரவாளர்கள், நகர, ஒன்றிய செயலாளர்கள், முன்னாள் எம்பி காளியப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் ஐம்பதுக்கும் மேற்பட்ட வாகனங்களில் தற்போது மேட்டுப்பாளையம் புறப்பட்டு சென்றனர்.

இதுவரை செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளர்களாக செயல்பட்டு வந்த இவர்கள், திடீர் பல்டி அடித்து இருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: ஒண்ணு கூடிட்டாங்களே! நிச்சயமா செங்கோட்டையனை சந்திப்பேன்... OPS உறுதி

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share