டாஸ்மாக் வழக்கில் திடீர் ட்விஸ்ட்... செந்தில் பாலாஜிக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் உத்தரவு... தவெகவுக்கு பின்னடைவு...!
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் முறைகேடு வழக்கு விசாரணைக்கு தடைவிதித்த உயர்நீதிமன்ற உத்தரவை இடைக்காலமாக நிறுத்திவைக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. அதுமட்டுமின்றி, டாஸ்மாக் முறைகேடு வழக்கு விசாரணைக்கு தடைவிதித்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க எதிர்மனுதாரர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக ஏற்கனவே அமலாக்கத்துறையின் அதிகாரங்களை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. இந்நிலையில், கடந்த விசாரணையின்போது செந்தில் பாலாஜி இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
இதையும் படிங்க: எதுக்கும் தயார்...! இன்னும் எத்தனை CASE.? செந்தில் பாலாஜி தடாலடி..!
அந்த மனுவை பரிசீலித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, அவருக்கு முன்ஜாமீன் வழங்கியிருந்தது.
இதனிடையே, உச்சநீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியிருந்த நிலையில், டாஸ்மாக் முறைகேடு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. அந்த விசாரணைக்கு தடை விதித்ததை எதிர்த்துதான் இந்த மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. அதே நேரத்தில், இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை நீட்டித்தும் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: ''ஊமையா நாங்க..!!'' - கொந்தளித்த செந்தில் பாலாஜி Vs சீறி எழுந்த சிடிஆர்... பேரவையில் காரசார விவாதம்...!