×
 

செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்...! அடுத்தடுத்து அதிரடி..! அரசியல் அரங்கில் பரபரப்பு..!!

ஆட்சிக் கலைப்பு சரி விவகாரத்தில் செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. என். இளையராஜா சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகாரில், தன்னை ஒரு நபர் தொடர்பு கொண்டு பேரம் பேசியதாகக் கூறினார். பிறகு திருநாவுக்கரசு என அடையாளம் காணப்பட்டார். திருநாவுக்கரசு இளையராஜாவிடம், “முக்கிய கட்சியைச் சேர்ந்தவர்கள் உங்களிடம் பேசச் சொன்னார்கள்” என்று தொடங்கி, நம்பிக்கையில்லா தீர்மானத்தில் சபாநாயகருக்கு எதிராக வாக்களித்தால் அல்லது ராஜினாமா செய்தால் கோடிக்கணக்கில் பணம் தருவதாக பேரம் பேசியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது. இந்தப் பேரத்தில் ரூ.35 கோடி வரை வழங்கப்படும் எனக் கூறப்பட்டதாகவும், மிரட்டல் கலந்த முயற்சிகளும் இருந்ததாகவும் எம்.எல்.ஏ. தெரிவித்தார். 

போலீசார் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர். இந்த விவகாரத்தில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக கைதானவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் விசாரணை நடைபெற்று வருகிறது. செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் ஆகியோருக்கு இன்று காலை சம்மன் வழங்கப்பட்டது. இருவரும் தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் நிலையில் அவரது பெற்றோரிடம் சம்மன் வழங்கப்பட்டிருக்கிறது.

ஆட்சிக் கலைப்பு சதி விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சம்மன் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. லுக் அவுட் நோட்டீஸ் என்பது இந்திய சட்ட அமலாக்க அதிகாரிகள் பயன்படுத்தும் ஒரு முக்கியமான கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கை ஆகும். இது ஒரு சர்குலர் வடிவில் வெளியிடப்படுகிறது.

இதையும் படிங்க: "ஆட்சிக் கவிழ்ப்பு சதி"..! வசமாக சிக்கிய விவகாரம்..! செந்தில் பாலாஜி, சகோதரர் அசோக்கிற்கு சம்மன்..!

இந்தியாவில் குற்ற விசாரணை அல்லது சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அல்லது தேடப்படும் நபர்களின் நுழைவு அல்லது வெளியேறும் இயக்கத்தை கண்காணிக்கவும், தடுக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால், ஒரு நபர் நாட்டை விட்டு தப்பி ஓட முயற்சித்தால் அவரை விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் எல்லைச் சோதனைச் சாவடிகளில் தடுத்து நிறுத்தி, உரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும் ஒரு எச்சரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே அதிர்ந்த அறிவாலயம்... செந்தில் பாலாஜி சகோதரர் மீது வழக்குப்பதிவு... குதிரை பேர விவகாரத்தில் அதிரடி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share