×
 

பட்டப்பகலில் பாலியல் தொழில்.. இரவில் பார்.. அரசு கட்டடத்தில் அரங்கேறும் அட்டூழியம்...!

மேலும் பயன்பாட்டில் இல்லாத அரசு கட்டிடத்தை சமூக விரோதிகள் மது அருந்தும் கூடாரமாக பயன்படுத்துவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்திருக்கிறார்கள். 

தர்மபுரியில் உள்ள பழைய நீதிமன்ற வளாகத்தில் இருக்கக்கூடிய கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே செயல்படாமல் உள்ள அரசு கட்டிடத்தில் பாலியல் தொழில் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. மேலும் பயன்பாட்டில் இல்லாத அரசு கட்டிடத்தை சமூக விரோதிகள் மது அருந்தும் கூடாரமாக பயன்படுத்துவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்திருக்கிறார்கள். 

தருமபுரி மைய பகுதியில்து நீதிமன்றம் செயல்பட்டு வந்தது. தற்போது போதிய வசதி இல்லாததால் தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்றமானது தடம் பகுதிக்கு மாற்றப்பட்டது. அதனால் அங்கு இருக்கக்கூடிய பல கட்டிடங்கள் பயன்பாடின்றி காலியாக உள்ளன. இதனால் ஆள் நடமாட்டம் இல்லாத கட்டிடங்கள்  சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.

நீதிமன்ற வளாகத்திலேயே கோட்டாட்சியர் அலுவலகமும் செயல்பட்டு வந்தது. அதுமட்டுமில்லாமல் சிறப்பு சார்பு நீதிமன்றம், விபத்து மற்றும் காப்பீட்டு நீதிமன்றமும் செயல்பட்டு வந்திருந்தது. அதுமட்டுமில்லாமல் தடவியல் நிபுனர் அலுவலகம் அப்புறம் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற அலுவலகமும் இந்த இடத்தில்தான் செயல்பட்டு வந்தன. இதனால வந்து மக்கள் கூட்டம் வந்து தினந்தோறும் குவியும் இடமாவும் இருக்கு. 

இதையும் படிங்க: ரூ. 7 கோடியில் நாய்களைப் பராமரிக்க காப்பகங்கள்... சென்னை மாநகராட்சியின் புதிய அறிவிப்பு...!

தற்போது கோட்டாட்சியர் அலுவலுக்கு பின்புறம் இருக்கக்கூடிய ஒரு பாழடைந்த பங்களாவி;ல் வந்து தற்பொழுது பாலியல் தொழில் நடந்து வந்திருக்கு. இது மட்டுமில்லாமல், இப்பகுதிக்கு ஆண்கள் அதிக அளவில் வருவதால் அப்பகுதிகள் பெண்கள் நடமாட்டவே அஞ்சும் பகுதியாக இருந்து வருகிறது. 

தற்பொழுது பாலியல் தோவில் நடப்பதால் அப்பகுதியில் யாரும் வழக்கமாக மேற்கொள்ளும் நடைபயிற்சியைக் கூட நிறுத்திவிட்டனர். அது மட்டும் இல்லாம இளைஞர்கள் மது அருந்தும் கூடாரமாக, சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறியிருக்கிறது. இதனை மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதையும் படிங்க: காசா போரை எப்படி நிப்பாட்டுறது! பாக்., அரபு தலைவர்களுடன் ட்ரம்ப் ஆலோசனை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share