கனடாவில் இந்திய பெண் படுகொலை!! காதலனே கொலை செய்த கொடூரம்!! உலுக்கும் பின்னணி!
காதலியை கொலை செய்துவிட்டு தலைமறைவான அப்துலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கனடாவின் டொரொண்டோ நகரில் இந்திய வம்சாவளி இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்த பெண்ணின் பெயர் ஹிமான்ஷி குரானா (வயது 30).
டொரொண்டோவின் மேற்கு வெல்லிங்டன் பகுதியைச் சேர்ந்த இவர், அப்துல் கபாரி (வயது 32) என்ற இளைஞருடன் காதல் உறவில் இருந்தார். இருவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள்.
கடந்த டிசம்பர் 19-ம் தேதி வெள்ளிக்கிழமை இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், அப்துல் கபாரி ஹிமான்ஷியை கொலை செய்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஜப்பானே அசந்து போச்சு!! இந்தியா செய்த அசத்தல் சாதனை!! இஸ்ரோ தலைவர் ருசிகர தகவல்!!
அடுத்த நாள் ஹிமான்ஷி மாயமானதாக அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர்.
டிசம்பர் 20-ம் தேதி காலை ஹிமான்ஷியின் வீட்டில் அவரது உடல் சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது காதல் தகராறில் நடந்த கொலை என்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொலை செய்துவிட்டு தலைமறைவான அப்துல் கபாரியை கனடா முழுவதும் தேடி வருகின்றனர் போலீசார். அவருக்கு எதிராக முதல் நிலை கொலை வழக்கில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கனடாவில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டொரொண்டோவில் உள்ள இந்திய தூதரகம் இந்த கொலைக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.
ஹிமான்ஷியின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறியுள்ள தூதரகம், உதவிகளை வழங்கி வருவதாக அறிவித்துள்ளது. இந்த கொலை காதல் உறவில் ஏற்பட்ட வன்முறை என்று போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் பெண்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளன. அப்துல் கபாரியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பொய்யர்கள், புரட்டர்கள்!! எது வேண்டுமானாலும் சொல்வார்கள்! அன்புமணியை கிழித்த ராமதாஸ்!