சிங்கப்பெண் விழாவில் அதிர்ச்சி... அரசு வெளியிட்ட ஏஐ வீடியோவில் இத்தனை தப்புகளா? |
சிங்கப்பெண் விழாவில் அதிர்ச்சி! அரசு வெளியிட்ட AI வீடியோவில் இத்தனை தப்புகளா? |
சிங்கப்பெண் அதிரடிப்படை தொடக்க விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட ஏஐ வீடியோவில் பல்வேறு தவறுகள் இடம்பெற்றுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.
தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்ற பின்னு, தேர்தல் வாக்குறுதிப்படி பெண்கள் பாதுகாப்புக்காக சிறப்பு அதிரடிப்படை அமைப்பதற்கான கோப்பில் முதல் கையெழுத்திட்டார். அதைத்தொடர்ந்து சிறப்பு அதிரடிப்படை அமைப்பதற்கான அரசாணையை உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் வெளியிட்டார். பொது இடங்களில் கண்காணிப்பு மற்றும் சுற்றுக்காவல் பணிகளை மேற்கொள்ளுதல், குற்றங்கள் நிகழ வாய்ப்புள்ள பகுதிகளைக் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளுதல், காவல்துறையின் இருப்பை உறுதி செய்து, பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே நம்பிக்கையை ஏற்படுத்துதல், பொது இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்தல், பொறுப்புடைய அனைவரையும் ஒருங்கிணைத்து, பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குதல், மக்கள் இயக்கமாக செயல்படுதல் ஆகியவை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் முக்கிய செயல்பாடுகள் ஆகும்.
இன்று சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழா இன்று நடைபெற்றது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' தொடக்க விழா இன்று மாலை 05.30 மணியளவில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட முதலமைச்சர் விஜய் திட்டத்தை தொடங்கி வைத்தார். திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைப்பதற்கு முன்பாக, முன்னோட்டமாக ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. ஆனால், அந்த வீடியோவில் பல்வேறு பிழைகள் இடம்பெற்றிருந்தது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மின்வெட்டா.? மின் திருட்டா.? தவிக்குது தமிழ்நாடு..! வேல்முருகன் ஆவேசம்..!!
குறிப்பாக, ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட அந்த வீடியோவில் தமிழ்நாடு அரசின் இலச்சினை (லோகோ) தவறாக இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. மேலும், “தமிழ்நாடு அரசு” என்ற வாசகம் பாதி தமிழிலும், மீதமுள்ள பகுதி வேறு மொழியிலும் இடம்பெற்றிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி, ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தின் பெயரும் தவறாக இடம்பெற்றிருந்தது. இந்த பிழைகள் சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாக்கப்பட்டு வருகின்றன.
வீடியோவில் இத்தகைய வெளிப்படையான தவறுகள் இருந்தபோதிலும், அவற்றை சரிசெய்யாமல் வெளியிட்டிருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட தொடக்க விழாவை முன்னிட்டு அரசு வெளியிட்ட இந்த ஏஐ வீடியோவில் ஏராளமான பிழைகள் இடம்பெற்றிருந்ததால், பொதுமக்கள் மற்றும் சமூக வலைதள பயனர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வீடியோவில் அரசின் இலச்சினை, தமிழ்நாடு அரசு என்ற வாசகம் மற்றும் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தின் பெயர் உள்ளிட்ட முக்கிய அம்சங்களில் ஏற்பட்டுள்ள தவறுகள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: தவெக அமைச்சர் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து அரங்கேறிய அவலங்கள்... அதிர்ச்சியில் மக்கள்...!