×
 

மன உளைச்சல்… டார்ச்சர் பண்ணாதீங்க..! SIR பணிகளை புறக்கணிக்கப் போவதாக அறிவிப்பு…!

நாளை முதல் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை புறக்கணிக்க போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. வருவாய் துறை சங்கங்களில் கூட்டமைப்பான FERA இந்த முடிவை ஒருமனதாக எடுத்துள்ளது. அதுமட்டுமில்லாத இன்று மாலை மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்த உள்ளதாகவும் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கிராம உதவியாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பணிகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாகவும் நில அளவர் முதல் ஆய்வாளர் வரை அலுவலக உதவியாளர், வட்டாட்சியர்களும் பணிகளைப் புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு உரிய கால அவகாசம் வழங்கிட வேண்டும் என்றும் வாக்காளர் சிறப்பு திருத்த பணியாள் அனைத்து நிலை வருவாய் துறை அலுவலர்களுக்கும் கடுமையான பணிநெருக்கடி மற்றும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் BLO மற்றும் BLA- களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தினமும் காணொளி வாயிலாக கூட்டங்கள் நடத்தி துன்புறுத்துவதை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பூத் ஏஜெண்டுகள் 50 படிவங்களை வாங்கலாம்... விமர்சனங்களுக்கு தேர்தல் ஆணையம் பதிலடி...!

பணி பளுவை கருத்தில் கொண்டு ஒரு மாத கால ஊதியத்தை மதிப்பூதியமாக வழங்க வேண்டும் என்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை பிழைகள் இன்றி மேற்கொள்ள கூடுதல் பணியாளர்களின் நியமிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தலைமை தேர்தல் அலுவலரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாததால் நாளை முதல் வாக்காளர் திருத்த பணிகளை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கல் எறியதான் செய்வாங்க..! ஆனால் பொறுமை அவசியம்... துணை ஜனாதிபதி கொடுத்த அட்வைஸ்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share