×
 

பகீர் சம்பவம்...!! பட்டப்பகலில் இளைஞர் சுட்டுக்கொலை.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்...!

இலங்கை கொழும்புவில் துப்பாக்கி சூட்டில் 30 வயது இளைஞர் மரணம், பதபதக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

இலங்கையில் அண்மைக் காலமாக துப்பாக்கி பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளன. போதைப்பொருள், நிழலுலக செயற்பாடுகள் மற்றும் தனிப்பட்ட காரணங்களை மையப்படுத்தி இந்த துப்பாக்கி பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, இந்த ஆண்டில் (2025) இதுவரையான காலம் வரை 105 துப்பாக்கி பிரயோக சம்பவங்கள் அரசு குற்ற ஆவணங்களில் பதிவாகியுள்ளன. இவ்வாறு நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகங்களில் 53 பேர் உயிரிழந்ததுடன், 58 பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கை கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 30 வயதான இளைஞர் உயிரிழந்தார். காரில் வந்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள் சிலர் துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: #Breaking கேரள எல்லையில் நிற்கும் ஆம்னி பேருந்துகள்... தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு...!

மேலும் காயமடைந்த இளைஞர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்து உள்ளார். இரண்டு நபர்கள் T56 துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டை விசாரணை நடத்துவதற்காக இரண்டு தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்

மேலும் துப்பாக்கி சூடு நடத்திய சிசிடிவி காட்சிகளின் பதபதக்க வைக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

இதையும் படிங்க: இன்று முதல் இதற்கு தடை... திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share