×
 

அரசியல் மாறலாம்... அன்பு மாறுமா..? உறவை மறக்காத ஸ்டாலின்..! ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து..!!

இன்று தனது பிறந்த நாள் கொண்டாடும் ராகுல் காந்திக்கு முன்னாள் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

இந்திய அரசியலில் தேசியக் கட்சிகளுக்கும் பிராந்தியக் கட்சிகளுக்கும் இடையிலான உறவுகள் பெரும்பாலும் தேர்தல் கூட்டணிகளின் அடிப்படையில் வடிவம் பெறும். அத்தகைய உறவுகளில் மிக நெருக்கமான ஒன்றாகக் கருதப்பட்டது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கும் இடையிலானது. ஒரு காலத்தில் “சகோதரர்கள்” என்று ஒருவரை ஒருவர் அழைத்துக் கொண்ட அவர்களது உறவு, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பகிரங்கமான பிளவாக மாறியது.

இந்த மாற்றம் இந்தியா கூட்டணியின் எதிர்காலத்தையே பாதிக்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ராகுல் காந்தியும் மு.க. ஸ்டாலினும் கட்சித் தலைமையை ஏற்ற காலகட்டத்தில் இருவருக்கும் இடையே நல்லிணக்கம் வளர்ந்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது ஸ்டாலின் ராகுலை பிரதமர் வேட்பாளராக பகிரங்கமாக ஆதரித்தார். தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு அதிக இடங்கள் ஒதுக்கி, பிரசாரத்திலும் தீவிரமாக ஈடுபட்டார். ராகுல் காந்தி பல மேடைகளில் ஸ்டாலினை “என் அண்ணன்” என்று அழைத்தார்.

“நான் வேறு எந்த அரசியல்வாதியையும் சகோதரன் என்று அழைப்பதில்லை. ஸ்டாலின் என் அண்ணன்” என்று ராகுல் கூறிய வார்த்தைகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றன. ஸ்டாலினும் ராகுலை தன் “தம்பி” என்று அன்புடன் குறிப்பிட்டார். இந்த உறவு வெறும் அரசியல் சந்திப்புகளுக்கு அப்பாற்பட்டு, தனிப்பட்ட அளவில் அன்பையும் மரியாதையையும் பிரதிபலித்தது.

இதையும் படிங்க: அப்படி ஒன்னும் பெருசா இல்ல..! தவெக வெள்ளை அறிக்கை... அண்ணாமலை விமர்சனம்..!!

இருப்பினும் 2026 தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அரசியலில் தலைக்கீழ் திருப்பம் ஏற்பட்டது. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகி தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணியில் இணைந்தது. இதனால் திமுக தரப்பில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் ராகுல் காந்திக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினும் வாழ்த்து கூறினார். ராகுல் காந்திக்கு திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து கூறினார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: உதயநிதியின் கோரிக்கையை சட்டென ஏற்ற CM விஜய்..! மேகதாது தனித் தீர்மானம்... ஒருமனதாக நிறைவேற்றம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share