×
 

மெட்ரோவை தொடர்ந்து விமான துறையிலும் பாகுபாடு... MP சு. வெங்கடேசன் கண்டனம்..!

ஆசியான் இருதரப்பு ஒப்பந்தத்தில் மதுரை விமான நிலையத்தை இணைக்க மத்திய அரசு மறுத்து உள்ளதாக எம்.பி. சு. வெங்கடேசன் கூறினார்.

பிற மாநிலங்களில் சிறிய விமான நிலையங்களைக் கூட ஊக்குவிக்கும் மத்திய அரசு தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கிறது என்றும் மெட்ரோவை தொடர்ந்து விமானதுறையிலும் அதே பாகுபாடு எனவும் கூறினார்.

மதுரை விமான நிலையத்தை சிங்கப்பூர், மலேசியா உள்ளடக்கிய ஏழு ஆசியான் நாடுகளுடன் சுற்றுலா மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வண்ணம் இந்திய அரசு மேற்கொண்டுள்ள சிறப்பு இருதரப்பு ஒப்பந்தத்தில் சுற்றுலா நகரமாக சேர்க்க வேண்டும் என மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவுக்கு கடிதம் எழுதியும், நேரில் சந்தித்தும் வழியுறுத்தி இருந்ததாக தெரிவித்தார்.

மதுரையை இந்த ஒப்பந்தத்தில் சுற்றுலா நகரமாக சேர்ப்பதற்கான திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை எனவும், இந்திய விமான நிறுவனங்கள் விரும்பினால் மதுரையிலிருந்து ஆசியான் நாடுகளுக்கு தங்கள் விமானங்களை இயக்க எந்த கட்டுப்பாடும் இல்லை எனவும், ஆனால் அந்த முடிவு இந்திய விமான நிறுவனங்கள் தங்கள் லாபம் மற்றும் வழித்தடத் திட்டங்களைக் கருத்தில் கொண்டு அவர்களே முடிவு செய்ய முடியும் என்றும் அரசு அவர்களின் விமான இயக்கத் திட்டங்களில் தலையிட முடியாது எனவும் பதில் கடிதம் அனுப்பியுள்ளார் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: குற்றங்களை தடுக்காமல் பண்பட்ட சமூகம்- னு சொல்ல முடியாது... கோவை மாணவிக்கு குரல் கொடுத்த கனிமொழி எம்.பி...!

ஒருபக்கம் இந்திய அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள் மதுரை விமான நிலையத்தின் வளர்ச்சிக்கு எதிராகவே உள்ளது என்றும் மறுபுறம் ஆசியான் சிறப்பு ஒப்பந்தத்தில் சுற்றுலா நகரங்கள் என சேர்க்கப்பட்டுள்ள 18 இந்திய நகரங்களை ஆராய்ந்தோமானால், கஜுராஹோ இன்றுவரை முழுமையான உள்நாட்டு விமான நிலையமாக உள்ளது எனவும் கூறினார். தென் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு மதுரையை ஆசியான் சிறப்பு ஒப்பந்தத்தில் ஒரு சுற்றுலா நகரமாக சேர்க்க மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். 

இதையும் படிங்க: அடாவடி, நிராகரிப்பு, திணிப்பு... அனைத்துக்குமான போராட்டம்..! முதல்வர் ஸ்டாலின் உறுதி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share