×
 

தேர்தலை நடத்துபவர்களுக்கே வாக்குரிமை இல்லை.. சுப்ரீம் கோர்ட்டில் அதிகாரிகள் முறையீடு..!

தேர்தல் அதிகாரிகளுக்கே ஓட்டுரிமை இல்லாமல் போயிருப்பதாக உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை சுத்தப்படுத்தும் நோக்கில் SIR என்ற சிறப்பு திருத்த நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் பீகாரில் மட்டும் ஏறக்குறைய 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள், குறிப்பாக திமுக உள்ளிட்ட கட்சிகள், இது “வாக்கு திருட்டு” என்று குற்றம் சாட்டின. வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் முறையீடுகள் செய்யப்பட்டன.

2025 ஆகஸ்ட் மாதத்தில் இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தை எட்டியது. தேர்தல் ஆணையம், நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் மற்றும் விவரங்களை வெளியிட மறுத்தது. உச்சநீதிமன்றம் இதை ஏற்கவில்லை. “அந்த விவரங்களை உடனடியாக வெளியிடுங்கள்” என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.

இது பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மை அடிப்படையில் முக்கியமான தீர்ப்பாகக் கருதப்பட்டது. நீக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிட மறுப்பது, மக்களின் வாக்குரிமையை பாதிக்கும் செயல் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இந்த நிலையில், தேர்தலை நடத்துபவர்களுக்கே வாக்குரிமை இல்லை என உச்சநீதிமன்றத்தில் 65 அதிகாரிகள் முறையீடு செய்துள்ளனர். மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள 65 அதிகாரிகள், SIRக்கு பிந்தைய பட்டியலில் தங்களது பெயர் இடம்பெறவில்லை என உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: தேர்தலையே ரத்து பண்ணனும்..! சுப்ரீம்கோர்ட்டில் மனுத் தாக்கல்..! அரசியல் கட்சிகளுக்கு ஷாக்..!!

"EPIC எண்ணைக் குறிப்பிட்டுதான் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த எண்ணே நீக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். தேர்தலை நடத்தும் எங்களுக்கே வாக்களிக்கும் உரிமை மறுப்பு” என வாதம். இதே வாதத்தை SIR தீர்ப்பாயத்தில் வாதிடுங்கள் என தலைமை நீதிபதி சூர்யகாந்த் பதில் அளித்தார். 

இதையும் படிங்க: சிங்கப்பூர்-ல இருந்து வந்தும் ஓட்டுப் போட முடியல..! ஆதங்கத்தை கொட்டிய குடும்பத்தினர்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share