×
 

அடக்கொடுமையே!! இப்படிக்கூடவா சாவு வரணும்.. அகமதாபாத் விபத்தில் உயிரிழந்த ஏர் இந்தியா விமானிகளின் கண்ணீர் கதை..!

மும்பையின் போவாய்  பகுதியில் வசித்து வந்த கேப்டன் சுமீத் சபர்வால் மிகவும் அமைதியானவர், சக ஊழியர்களிடம் மரியாதையாக நடந்து கொள்ளக்கூடியவர் என பெயர் வாங்கியுள்ளார்.

இந்தியாவையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்தில் பல்வேறு சோகக்கதைகள் வெளியான வண்ணம் உள்ளன. தற்போது அந்த விமானத்தை ஓட்டிய 2 விமானிகள் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கேப்டன் சுமீத் சபர்வால் மற்றும் துணை விமானி கிளைவ் குந்தர் இவர்கள் இருவரும் தான் ஜூன் 12ம் தேதி மாலை 1.38 மணி அளவில் அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் செல்லவிருந்த போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தை ஓட்டியவர்கள். இருவரும் 230 பயணிகளையும் 10 பணியாளர்களையும் ஏற்றிக்கொண்டு லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்கு வழக்கம் போல் விமானத்தை இயக்கியுள்ளனர்.

ஒரு விமானியின் அனுபவம் என்பது அவர்களுடைய பயண நேரத்தை அடிப்படையாகக்கொண்டது. அந்த வகையில் இரண்டு விமானிகளும் சேர்ந்து 9,300 மணிநேரம் விமானப் பயண அனுபவத்தைப் பெற்றுள்ளனர். கேப்டன் சபர்வால் மட்டும் 8,200 மணிநேரம் விமானப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். மும்பையின் போவாய்  பகுதியில் வசித்து வந்த கேப்டன் சுமீத் சபர்வால் மிகவும் அமைதியானவர், சக ஊழியர்களிடம் மரியாதையாக நடந்து கொள்ளக்கூடியவர் என பெயர் வாங்கியுள்ளார்.

இதையும் படிங்க: #BREAKING அகமதாபாத் விமான விபத்தில் பலி எண்ணிக்கை 274 ஆக உயர்வு.. அப்பாவி மருத்துவ மாணவர்கள், பொதுமக்கள் இவ்வளவு பேர் மரணமா?

இவருடைய அப்பா ஒரு முன்னாள் டிஜிசிஏ அதிகாரியாம், மேலும் சுமீத் சபர்வால் குடும்ப உறவினர்களில் ஏற்கனவே 2 விமானிகள் இருந்துள்ளனர். அவர்களைப் பார்த்தே சுமீத் விமான ஓட்டியாக மாறியுள்ளார். இந்த விபத்தில் உயிரிழப்பதற்கு சில நாட்களுக்கு முன்பே தனது 82 வயது தந்தையை பராமரிப்பதற்காக வேலையை விட்டு நிற்கும் முடிவை சுமீத் சபர்வால் எடுத்திருந்துள்ளார். 

1,100 மணிநேர விமானப் பயண அனுபவத்தைக் கொண்ட துணை விமானியான கிளைவ் குந்தர், மும்பையில் உள்ள கலினாவின் ஏர் இந்தியா காலனியில் தான் வளர்ந்துள்ளார். ஏனெனில் இவருடைய அம்மா ஒரு விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றியுள்ளார். தனது கனவு வாழ்க்கையில் துணை விமானியாக குந்தர் இப்போதுதான் சிறகு விரித்து பறக்க ஆரம்பித்திருக்கிறார். அப்படிப்பட்ட நிலையில், அகமதாபாத் விமான விபத்தில் அவர் உயிரிழந்தது ஒட்டுமொத்த குடும்பத்தையும் உலுக்கியுள்ளது.

இதையும் படிங்க: “இதுவுமா இப்படி சதி பண்ணனும்”.. குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி மரணத்தில் வெளியான பகீர் தகவல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share