தவெகவுக்கு இத்தனை தொகுதியா? - யாரும் எதிர்பார்க்காத கருத்துக்கணிப்பு... வாயை பிளந்த திமுக, அதிமுக...!
திமுக 120 முதல் 140 தொகுதிகளில் வெற்றி பெறும் என பீப்பிள்ஸ் இன்சைட் கருத்துக் கணிப்பு கூறுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்ற நிலையில், வரும் மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மாநிலத்தில் 234 தொகுதிகள் உள்ள நிலையில், ஆட்சி அமைக்க குறைந்தது 118 இடங்களில் வெல்ல வேண்டும். இதற்கிடையே இப்போது 6.30 மணி முதல் தமிழ்நாடு தேர்தல் தொடர்பான எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி வருகிறது. அதில் இதுவரை வெளியான 5 சர்வேக்களில் திமுக ஆட்சியே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கமக்யா அனலிடிக்ஸ் எக்ஸிட் போல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது என அந்நிறுவனம் கணித்துள்ளது. திமுக கூட்டணி 95 இடங்கள் வரை பெற்று முதலிடம் பிடித்தாலும் மெஜாரிட்டி கிடைக்காது என்றும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட வாய்ப்பில்லை என்றும் உறுதியாக கணிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் 25 முதல் 31 சதவீத வாக்குகளைப் பெற்று 67 முதல் 91 தொகுதிகளை கைப்பற்றி கிங் மேக்கராக உருவெடுக்கக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி 84 இடங்கள் வரை வெல்ல வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமைக்கும்: ஜேவிசி - டைம்ஸ் நவ் கணிப்பு தெரிவித்துள்ளது. அதிமுக கூட்டணி 128 முதல் 147 தொகுதிகளில் வெல்லும் என்றும், திமுக கூட்டணி 75 - 95 தொகுதிகளை கைப்பற்றும்என்றும், தவெக 8 முதல் 15 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரசியல் ஹீட்.. ஆன்மிக டச்..! மாஸ் என்ட்ரி... சீரடியில் சாய்பாபாவை தரிசித்த விஜய்..!!
அதிமுக கூட்டணி 124-127 இடங்களை வென்று ஆட்சியைப் பிடிக்க அதிக வாய்ப்புள்ளதாக ஸ்பைக் மீடியா எக்ஸிட் போல் தெரிவித்துள்ளது. அதேசமயம் ஆளும் திமுக கூட்டணி 89-101 இடங்களை மட்டுமே பெற்று தோல்வியை சந்திக்கும் என்றும், தமிழக வெற்றி கழகம் 4-6 இடங்களை பெற்று 3ம் இடம் பிடிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் ஆட்சி அமைக்கும் திமுக என பீப்பிள்ஸ் இன்சைட் கருத்துக் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது திமுக 120 முதல் 140 தொகுதிகளில் வெற்றி பெறும் என பீப்பிள்ஸ் இன்சைட் கருத்துக் கணிப்பு கூறுகிறது. அதிமுக 60 முதல் 70 தொகுதிகளில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "அண்ணா எங்கள பாருங்க"..! ட்ராபிக்கில் விஜய் காரை பார்த்ததும் துள்ளி குதித்த பெண்கள்..!