மழை இன்னும் முடியவில்லை! செப்.10 வரை வந்தாச்சு அலர்ட்! தமிழகத்தில் வானிலை எப்படி இருக்கும்?
வரும் செப். 10-ம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் இன்று (செப். 4) சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வானிலை மையத்தின் அறிக்கையின்படி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை ஆகிய பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மழையுடன் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றும் வீச வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியிலும் சில இடங்களில் இதேபோன்ற வானிலை நிலவக்கூடும். தமிழகத்தின் பிற பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்! நாளையும் நாளை மறுநாளும் மாறப்போகுது வானிலை! குடை ரெடியா?
நாளை (செப். 5) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அப்போது இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு உடனடியாக முடிவடையாது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. வரும் செப். 10-ம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்று மற்றும் நாளை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களில் பொதுமக்கள் வெளியில் செல்லும்போது வானிலை நிலவரத்தை கவனித்து பயணத்தை திட்டமிடுவது நல்லது. குறிப்பாக இடி, மின்னல் மற்றும் பலத்த காற்று ஏற்படும் நேரங்களில் திறந்தவெளி பகுதிகளில் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது பாதுகாப்பானதாக இருக்கும்.
இதையும் படிங்க: இன்று முதல் ஆட்டம் ஆரம்பம்! தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கும்! சென்னைக்கும் முக்கிய எச்சரிக்கை!