×
 
☰

குடையை ரெடியா வச்சுக்கோங்க! தமிழகத்தில் மீண்டும் வேகம் எடுக்கும் மழை! வானிலை மையம் அலர்ட்!

அடுத்த நாள்களிலும் சில மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கோவை மற்றும் நீலகிரி பகுதிகளில் மழையின் தாக்கம் நீடிக்கக்கூடும்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைக்கான சூழல் நிலவி வரும் நிலையில், இன்று 23 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டிய மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதன் தாக்கத்தால் தென் மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்யும் சூழல் உருவாகியுள்ளது.

இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்? வானிலை ஆய்வாளர் சொன்ன முக்கிய தகவல்!

இதுதவிர திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த நாள்களிலும் சில மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கோவை மற்றும் நீலகிரி பகுதிகளில் மழையின் தாக்கம் நீடிக்கக்கூடும்.

இதற்கிடையே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடி, மின்னலுடன் மழை பெய்யும் நேரங்களில் பொதுமக்கள் திறந்தவெளிகளில் நிற்பதை தவிர்த்து, பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: தமிழகத்தில் மீண்டும் கனமழை? செப்.30, அக்.1-ல் வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை! வானிலை முழு அப்டேட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share