×
 

நிதி உண்மைகள் வெளிச்சம் பார்க்குமா? காத்திருக்கும் தமிழகம்… இன்று வெளியாகிறது வெள்ளை அறிக்கை..!

தமிழக அரசின் வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியாகிறது.

தமிழக அரசியலில் சமீபத்தில் ஏற்பட்ட மாற்றத்தின் ஒரு முக்கிய அம்சமாக, தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான புதிய அரசு, முன்னாள் தி.மு.க. அரசின் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பதவியேற்ற உடனேயே வெளியான முக்கிய அறிவிப்புகளில் ஒன்றாகும்.

இது தமிழகத்தின் தற்போதைய பொருளாதார சூழலை வெளிப்படையாக மக்களுக்கு தெரிவிக்கும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. முதலமைச்சர் விஜய், பதவியேற்பு விழாவின்போது மற்றும் தனது முதல் உரையில், தமிழகம் சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையுடன் இருப்பதாகவும், முன்னாள் தி.மு.க. அரசு கருவூலத்தை காலியாக விட்டுச் சென்றதாகவும் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், அரசின் உண்மையான நிதி நிலைமையை மக்களுக்கு தெரியப்படுத்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று உறுதியளித்தார். இந்த அறிவிப்பு, புதிய அரசின் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையான நிர்வாகத்தை உறுதிப்படுத்தும் முதல் படியாகப் பார்க்கப்படுகிறது. நிதியமைச்சர் மரிய வில்சன் இந்த விவகாரத்தில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்.

இதையும் படிங்க: போதைப் பொருளுக்கு செக்..! டிஜிபியாக பொறுப்பேற்றதும் அதிரடி காட்டும் மகேஷ் குமார் அகர்வால்..!!

அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதுடன், அறிக்கை தயாரிப்பு விரைவாக நடைபெறுவதாகவும், இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், தமிழக அரசின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியிடப்படவுள்ளது. நிதி அமைச்சர் மரியா வில்சன் இந்த வெள்ளை அறிக்கையை வெளியிடுவார். மாநிலத்தின் வருவாய், செலவினம் மற்றும் கடன் அளவுகள் உள்ளிட்ட தமிழகத்தின் நிதி நிலைமை குறித்த விரிவான மதிப்பீட்டை இந்த அறிக்கை முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்! ககன்தீப் சிங் பேடி, அமுதா உள்ளிட்ட 17 பேருக்கு புதிய பொறுப்புகள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share