வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..!! தைப்பூசத்திற்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து..!!
தைப்பூச திருநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் இன்று தைப்பூசத் திருநாள் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. காலை முதலே மாநிலம் முழுவதிலும் உள்ள முருகன் கோயில்களில் பக்தர்கள் அலைமோதுகின்றனர். பால்குடம், காவடி, அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்களுடன் பக்தர்கள் முருகப் பெருமானை வழிபடுகின்றனர். திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை, மறுதமலை உள்ளிட்ட அறுபடை வீடுகள் மட்டுமின்றி, மற்ற முருகன் கோயில்களிலும் கணிசமான பக்தர்கள் குவிந்துள்ளனர். இந்தப் புனித நாளில் தமிழகமெங்கும் மகிழ்ச்சியும் பக்தி உணர்வும் நிறைந்துள்ளது.
தைப்பூசத் திருநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள், பொதுப் பிரமுகர்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில் பிரதமர் நரேந்திர மோடியும் தமிழில் சிறப்பான வாழ்த்து ஒன்றைப் பகிர்ந்துள்ளார். சமூக வலைதளமான எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) இல் அவர் வெளியிட்ட பதிவில், முருகப் பெருமானின் அருளை வேண்டி, அனைவருக்கும் மகிழ்ச்சி, ஆரோக்கியம், வெற்றி, வளம் நிறைந்த வாழ்க்கையை விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் வாழ்த்துச் செய்தி பின்வருமாறு அமைந்துள்ளது: "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! புனிதமான தைப்பூசத் திருநாளில் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகள். முருகப்பெருமானின் தெய்வீக அருள் எப்போதும் நம்மீது பொழியட்டும். அவரது அருளால் நல்ல ஆரோக்கியம், வெற்றி, செழிப்பு ஆகியவை அனைவருக்கும் கிடைக்கட்டும். இந்தப் புனித நாள் நமது வாழ்வில் அமைதியையும், நேர்மறை எண்ணங்களையும், செயலூக்கத்தையும் தரட்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நீங்கள் அனைவரும் திருக்குறளை படிக்க வேண்டும்..!! பிரதமர் மோடி திருவள்ளுவர் தின வாழ்த்து..!!
பிரதமர் மோடியின் இந்தத் தமிழ் வாழ்த்து சமூக வலைதளங்களில் விரைவாகப் பரவி, பக்தர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. தைப்பூசத் திருவிழா தமிழ் மக்களின் பாரம்பரியத்தையும், ஆன்மீகத்தையும் உலகெங்கும் கொண்டாடும் முக்கியமான திருநாளாக விளங்குகிறது. இந்நாளில் முருகனின் அருளால் அனைவரும் மகிழ்ச்சியுடனும், வெற்றியுடனும் வாழ வேண்டும் என்பதே பொதுவான விருப்பமாக உள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் மோடி பங்கேற்கும் மதுரை கூட்டம் சென்னைக்கு மாற்றம்? பாஜக மேலிடம் தீவிர ஆலோசனை!