திருச்செந்தூரில் புதிய கட்டண முறை... கோர்ட்டில் இருந்து இந்து அறநிலையத்துறைக்கு பறந்த அதிரடி உத்தரவு...!
கட்டணங்களை உயர்த்துவது தொடர்பாக முடிவெடுக்க 21ஆம் தேதி வரை கருத்துக்கள் தெரிவிக்க தேதி நீட்டிக்கவும் உத்தரவு.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் தரிசன பூஜை கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பை ரத்து செய்யக் கோரிய வழக்கு. கட்டண உயர்வு தொடர்பான விளம்பரத்தை இந்து சமய அறநிலைய துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட மதுரை கிளை உத்தரவு.
தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தரிசன கட்டணம், சிறப்பு பூஜை கட்டணம் உள்ளிட்டவை கோவிலின் தக்கார் அல்லது அறங்காவலர் குழுவின் தீர்மானத்தில் அடிப்படையில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டு முடிவு செய்யப்படும். ஆனால் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில், பொதுமக்களிடம் கருத்து கேட்பு நடத்துவதற்கான அறிவிப்பு பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்படவில்லை.
இதனால் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க போதுமான வாய்ப்பு வழங்கப்படவில்லை. ல் எனவே திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் தரிசன பூஜை கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பை ரத்து செய்வதோடு, அதனை நடைமுறைப்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும். மேலும் கோவிலின் தக்காராக அருள்முருகன் செயல்பட தடை விதிப்பதோடு, அறங்காவலர் குழு அமைக்கப்பட்ட பின் கட்டணங்களை உயர்த்துவது தொடர்பாக முடிவெடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு... ஜூலை 1 முதல் தடை... வெளியானது முக்கிய அறிவிப்பு...!
இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில், "மனுதாரர் தனது ஆட்சேபனையை பதிவு செய்துள்ளார். ஜூன் 25ஆம் தேதி அவர் வழங்கிய ஆட்சியபனை, 27 ஆம் தேதி கிடைக்கப்பெற்றது. மனுதாரர் 28ஆம் தேதி வழக்கினைத் தாக்கல் செய்துள்ளார்" என தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், "கட்டண உயர்வு தொடர்பான விளம்பரத்தை இந்து சமய அறநிலைய துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடவும், கடைசி நாளை ஜூலை 21ஆம் தேதி வரைகருத்துக்கள் தெரிவிக்க தேதி நீட்டிக்கவும் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.
இதையும் படிங்க: திருச்செந்தூர் தரிசன டிக்கெட் மோசடி வழக்கு... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த முக்கிய உத்தரவு...!