சனாதன சக்தி துணையோடு திரிபுவாத அரசியல்... விஜயை மறைமுகமாக சாடிய திருமா...!
திரிபுவாத அரசியல் செய்வதாக விஜயை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, தமிழக அரசியலில் நீண்டகாலமாக செயல்படும் மூத்த தலைவர்களில் ஒருவர். அவர் பலமுறை நடைபயணங்களை மேற்கொண்டு மக்களுடன் நேரடித் தொடர்பு கொண்டு, பல்வேறு சமூகப் பிரச்சினைகளை எழுப்பி வந்திருக்கிறார். இதுவரை அவர் பத்துக்கும் மேற்பட்ட நடைபயணங்களை நடத்தியுள்ளார், அவை போதைப் பொருள் தடுப்பு, மது ஒழிப்பு, நதிநீர் இணைப்பு போன்ற விவகாரங்களை மையப்படுத்தியவை.தற்போது, தொடங்கிய அவரது சமத்துவ நடைபயணம் குறித்து பேசப்படுகிறது. இந்த நடைபயணம் திருச்சிராப்பள்ளியில் இருந்து தொடங்கி, மதுரையில் ஜனவரி 12 ஆம் தேதி நிறைவு பெறுகிறது.
மணப்பாறை, திண்டுக்கல் வழியாக செல்லும் இந்தப் பயணம், சமூகத்தில் அதிகரித்து வரும் போதைப் பொருள் பயன்பாடு மற்றும் மது அருந்துதலை எதிர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதை முதன்மையான நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக, இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் மத்தியில் போதைப் பழக்கம் பரவுவதைத் தடுக்கவும், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.இதற்கு அப்பால், இந்த நடைபயணம் சமூகத்தில் சாதி மறுப்பு, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. சாதி பெருமை என்ற பெயரில் நடக்கும் மோதல்கள் மற்றும் கொலைகளுக்கு எதிராகவும் குரல் கொடுக்கிறது.
தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்வதும், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றிக்கு ஆதரவு திரட்டுவதும் இதன் அரசியல் பின்னணியாக உள்ளது. வைகோ தனது முந்தைய நடைபயணங்களில் அரசியல் பேசுவதைத் தவிர்த்திருந்தாலும், தேர்தல் நெருங்கிவரும் இந்நேரத்தில் இது அரசியல் நோக்கத்தையும் கொண்டிருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஒரே ஸ்ட்ரோக்- ல ஆட்சிக்கு வருவாராம்... நடக்குற காரியமா? விஜயை வறுத்தெடுத்த திருமா..!
இந்த நடைப்பயணத்தின் தொடக்க நிகழ்ச்சியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார். அப்போது பேசிய திருமாவளவன், மறைமுகமாக விமர்சித்தார். சனாதன சக்திகளுக்கு துணையாக இருந்து கொண்டு திராவிடத்தையும், தமிழ் தேசியத்தையும் பேசுபவர்கள் முகமூடிகளை அணிந்து திரிபுவாத அரசியலை செய்வதாக தெரிவித்தார். முகமூடிகளை கொண்டுள்ளவர்களை வீழ்த்தும் பொறுப்பும் இருப்பதால் நாம் உறுதிப்பாட்டோடு ஒன்றுபட்டு நிற்கிறோம் என கூறினார்.
இதையும் படிங்க: 97 லட்சம் வாக்குகள் நீக்கத்திற்கு இதுதான் காரணமா? - தமிழக மக்களை அலர்ட் செய்த திருமாவளவன்...!