×
 

பாஜகவுக்கு எதிராக விசிக - பாமக ஒன்றிணையுமா?... திடீரென பாய்ந்த திருமாவளவனே எதிர்பார்க்காத கேள்வி... என்ன சொன்னார் தெரியுமா?

பாஜகவிற்கு எதிராக தவெக -திமுக ஒன்றாக இருக்கலாம் என கூறிய நிலையில் பாஜகவிற்கு எதிராக விசிகவும் - பாமகவும் இணையுமா? என்ற கேள்விக்கு யாருமே எதிர்பார்க்காத பதிலளித்துள்ளார்.

பாஜகவிற்கு எதிராக தவெக -திமுக ஒன்றாக இருக்கலாம் என கூறிய நிலையில் பாஜகவிற்கு எதிராக விசிகவும் - பாமகவும் இணையுமா? என்ற கேள்விக்கு திருமாவளவன் அளித்துள்ள பதில் அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது. 

இந்த கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், பாமகவின் கடந்த கால நடவடிக்கைகள் பாஜகவை ஒட்டியே இருந்ததால் தான் நாங்கள் அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்க நேர்ந்தது, யூகமான கேள்விக்கு யூகமான பதில் சொல்ல முடியாது என்றார். 

எங்கள் நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். சாதிய மதவாத அரசியலை உயர்த்திப் பிடிக்கின்ற கட்சிகளுடன் தேர்தலுக்காக கூட நாங்கள் கூட்டணி உறவை வைத்துக்கொள்ள மாட்டோம் என்பதில் இன்றைக்கு உறுதியாக இருக்கிறோம் என்றார். 

இதையும் படிங்க: “யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்...” - சி.எம்.விஜய்க்கு செக் வைத்த விசிக தலைவர் திருமா...!

தமிழ்நாட்டை தவிர பிற மாநிலங்களில் அம்பேத்கர் சிலைகளை எளிதாக நிறுவ முடியும். ஆனால், தமிழகத்தில் மட்டும் தான் அனுமதி பெற வேண்டும். அதுவும், வெண்கல சிலை தான் வைக்க முடியும். இதுவே அம்பேத்கரை அவமதிக்கு செயல் தான். சேலம் விவகாரத்தில் தவெக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அம்பேத்கர் சிலைகளை நிறுவ அனுமதிக்க வேண்டும். 

மறியல் போராட்டம் நடத்திய தலித் அல்லாதவர் மீது வழக்கு இல்லை. ஆனால், தலித் மக்கள் மீது வழக்கு போட்டுள்ளார்கள். கைது செய்துள்ளார்கள். மாணவர்கள் கூட சிக்கியுள்ளனர். அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

 தவெக - பாமகவுடன் இணக்கமாக உள்ளதே என்ற கேள்விக்கு, தவெக யாரோடும் இணக்கமான போக்கை கடைப்பிடிக்கலாம்.பாஜகவுக்கு எதிராக பாமகவுடன் இணைந்து பயணிக்க முடியுமா என்ற கேள்விக்கு, எங்களை பொறுத்தவரை சாதிய மதவாத அரசியலை கொண்டுள்ள கட்சிகளோடு தேர்தலுக்காக கூட கூட்டணி வைக்க மாட்டோம். இந்த நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம். தவெக - விசிக இடையே நல்ல இணக்கம் நிலவுகிறது. எங்களுக்கு இடையில் எந்த இடைவெளியும் இல்லை 

 சபரிவர்மன் உயிரிழந்த சம்பவம் கொடிய துயரம் நிகழ்ந்த நிகழ்வு அதனை எண்ணி வேதனைப்படுகிறோம். அந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சபரிவர்மன் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளார். அதனை முதலமைச்சர் பரிசிலித்து குடும்பத்தினரின் உணர்வை மதித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்  

பழனி கோவில்   பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் அமைச்சர் சில விளக்கங்களை தந்துள்ளார். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதில் முதலமைச்சர் கவனம் செலுத்தவேண்டும் உரிய விசாரணை நடத்தி தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதையும் படிங்க: துரோகம் பண்ண என்ன இருக்கு?! திமுக இத பண்ணலையே! திருமாவளவன் பரபரப்பு விளக்கம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share