விஷவாயு தாக்கி இறந்தவர்களுக்கு ரூ.30 லட்சம் நிவாரணம்..! முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு..!
பல்லடத்தில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 30 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க சாய ஆலை நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூரில் தனியாருக்குச் சொந்தான சாய ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது சுமார் 7 அடி ஆழமுள்ள சாயக்கழிவு நீர்த்தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 4 தொழிலாளர்களுள் 3 பேர் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: திருப்பூரில் நடந்த கோர விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியான சோகம்..!
இந்நிலையில் விஷவாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க சாய ஆலை நிறுவனம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது
.
இதையும் படிங்க: மீண்டும் ஒரு வேங்கைவயல் சம்பவம்..! அதிர்ச்சியில் திருப்பூர் மக்கள்..!