×
 

கதிகலங்க வைக்கும் கும்மிடிப்பூண்டி கொடூரம்..!! வடமாநில தொழிலாளர்கள் லிஸ்ட்..! திருவள்ளூர் காவல்துறை எச்சரிக்கை..!!

வடமாநில தொழிலாளர்கள் விவரங்களை சேகரித்து வைப்பது கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் ஜூன் 14 அன்று மாலை நிகழ்ந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகாயங்களுடன் முட்புதரில் கிடைத்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

சம்பவத்தன்று மாலை, வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை காணாமல் போனதாக பெற்றோர் புகார் அளித்தனர். பொதுமக்கள் உதவியுடன் தேடியபோது, அருகிலுள்ள முட்புதரில் காயங்களுடன் குழந்தை மீட்கப்பட்டார். உடனடியாக கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், ஜூன் 15 அன்று காலை குழந்தை உயிரிழந்தார். மருத்துவர்கள் அதிக ரத்தப்போக்கு மற்றும் படுகாயங்களை உறுதிப்படுத்தினர்.

காவல்துறை விசாரணையில், குழந்தைக்கு அறிமுகமான அதே பகுதியில் வேலை செய்யும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர் பிபின் மஞ்சி என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட காவல்துறை, தொழில் நிறுவனங்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. வடமாநில தொழிலாளர்களின் முழு விவரங்கள், பெயர், முகவரி, தொலைபேசி எண், ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் ஆகியவற்றை சேகரித்து பராமரிக்காத நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முறையான பட்டியல் மற்றும் ஆவணங்கள் இல்லாததால் இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு சர்ப்ரைஸ்! ஸ்லோவாக்கியப் பள்ளி மாணவர்கள் அசத்தல்!

இந்த எச்சரிக்கை SIPCOT உள்ளிட்ட தொழிற்பேட்டை பகுதிகளில் செயல்படும் அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஒப்பந்ததாரர்கள் மூலம் வரும் தொழிலாளர்களின் விவரங்களை நிறுவனங்கள் சரியாக பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

இதையும் படிங்க: போரை நிறுத்த ஈரானுடன் ரூ.3 ஆயிரம் கோடிக்கு டீல்?!! காசு கொடுத்து ஒப்பந்தம் கையெழுத்து?! அதிபர் பதில் என்ன?!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share