“அவசரப்படுத்தாதீங்க” - தமிழக அரசுக்கு கெடு விதித்த நீதிபதிகள்... திருப்பரங்குன்றம் வழக்கில் முக்கிய அறிவிப்பு...!
அனைத்து தரப்பினரின் வாதங்களைக் கேட்டு உத்தரவு பிறப்பிக்க இருக்கிறோம், உத்தரவுகள் பிறப்பிக்க கோரி நீதிமன்றத்தை அவசரப்படுத்த வேண்டாம்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை டிசம்பர் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அருகில் உள்ள தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையரின் மேல்முறையீடு, உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரணை நடத்தியது. இதற்கு முன்னதாக அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், வாத மற்றும் பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டன.
தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனோசிங்க காணொலி மூலமாக ஆஜராகினார். இரு நீதிபதிகள் அமர்விலே விசாரணை தற்போது புதன்கிழமை வரை மனு தாக்கல் செய்ய அனுமதித்ததாகவும், அனைத்து மனுக்களும் புதன்கிழமை விசாரிக்கப்படும் என்றும் அறிவித்தனர். இடையீட்டு மனுவாக தாக்கல் செய்ய அனுமதி இல்லை என்றும், வேறு யாரும் மேல்முறையீடு செய்வதற்கு மனுதாக்கல் செய்ய விரும்பினால் தாக்கல் செய்யலாம் என்றும் தெரிவித்த நீதிபதிகள் அமர்வு, அனத்து மனுக்களையும் ஒன்றாக இணைத்து விசாரிக்கவுள்ளதாக அறிவித்தனர்.
இதையும் படிங்க: #BREAKING திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் திடீர் திருப்பம்... இன்றே தீர்ப்பு... பரபரக்கும் நீதிமன்றம்...!
விரும்புவர்கள் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்யலாம்; வெள்ளிக்கிழமை வழக்குகள் விசாரிக்கப்படும். அதன்பின்னர் புதிதாக வரும் மனுக்கள் ஏற்கப்படாது எனக்கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணை டிசம்பர் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அப்போது தலையிட்ட தமிழக அரசு, வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைக்க கோரிக்கை விடுத்தது.
அரசு தரப்பு கோரிக்கை ஏற்று மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையரின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஐகோர்ட் மதுரைக் கிளையில் டிச.12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் அனைத்து தரப்பினரின் வாதங்களைக் கேட்டு உத்தரவு பிறப்பிக்க இருக்கிறோம், உத்தரவுகள் பிறப்பிக்க கோரி நீதிமன்றத்தை அவசரப்படுத்த வேண்டாம் என்றும் இரு நீதிபதிகள் அமர்வு தெளிவுப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: “மத ரீதியிலான பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி” - பாயிண்ட்டை பிடித்த தமிழ்நாடு அரசு... இந்து அமைப்பு Vs தர்கா நிர்வாகம் இடையே அனல் பறந்த வாதம்...!