×
 

#BREAKING திருப்பரங்குன்றத்தில் திக்.. திக்...!! - காலையிலேயே காவல்துறை அதிரடி... நயினார் நாகேந்திரன் உட்பட 113 பேர் மீது பாய்ந்தது நடவடிக்கை...!

திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 93 பேர் மீது வழக்குப் பதிவு

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் மனுதாரர் ஏற்ற வேண்டும் இதற்கு மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேற்று உத்தரவிட்டதோடு, 144 தடை உத்தரவையும் நீக்கி உத்தரவிட்டிருந்தார். 

இதனையடுத்து, தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜவினர் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் திருப்பரங்குன்றத்தில் குவிய ஆரம்பித்தனர். அங்கு கூடி பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 144 தடை உத்தரவை ரத்து செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதால், அனைவரும் கலைந்து செல்லும் படி அறிவுறுத்தினர்.

 ஆனால், கலைந்து போக மறுத்த நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உள்ளிட்டோர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனால் போலீசாருக்கும் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினருக்கும் இடையே கடும் மோதல் நிலவியது. 

இதையும் படிங்க: “யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் ஆனால்...?” - விஜயை விடாமல் சீண்டும் நயினார் நாகேந்திரன்...!

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தமிழகம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது.

இதனிடையே, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட 113  நபர்கள் மீது ஏழு பிரிவின் கீழ் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 சட்டவிரோதமாக அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டது,போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட ஏழு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "சேரக்கூடாத இடம் சேர்ந்த செங்கோட்டையனுக்கு தோல்வியே மிஞ்சும்" - நயினார் நாகேந்திரன் சாடல்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share