×
 

களைகட்டும் தேர்தல் களம்: தமிழகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்!

ஏப்ரல் 6-ஆம் தேதி வரை மட்டுமே அவகாசம் நேரடியாகவோ அல்லது இணையதளம் வழியாகவோ மனுத்தாக்கல் செய்யலாம்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான மிக முக்கியமான கட்டமான வேட்புமனு தாக்கல் இன்று (திங்கள்கிழமை) காலை 11 மணிக்கு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிறது. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் அந்தந்தத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தங்களது மனுக்களைத் தாக்கல் செய்ய உள்ளனர்.

இதனையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று காலை 11 மணி முதல் வேட்புமனுக்கள் பெறப்படுகின்றன. வேட்பாளர்கள் நேரடியாகத் தேர்தல் அலுவலகத்திற்கு வந்தோ அல்லது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வழியாகவோ தங்களது மனுக்களைச் சமர்ப்பிக்கலாம். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி கடைசி நாளாகும்.

இதையும் படிங்க: ஸ்டாலின், இபிஎஸ் காரையும் செக் பண்ணுங்க! தேர்தல் அதிகாரிகளுடன் சீமான் வாக்குவாதம்!

இடையில் வரும் விடுமுறை நாட்களைத் தவிர்த்து, வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்ய மொத்தம் 4 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது வேட்பாளருடன் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், ஊர்வலமாக வரும்போது தேர்தல் நடத்தை விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள சூழலில், தவெக தலைவர் விஜய் அவர்கள் இன்று சென்னையில் தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார். ஏற்கனவே திமுக தனது 525 வாக்குறுதிகள் கொண்ட 'சூப்பர் ஸ்டார்' தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நாம் தமிழர் கட்சியின் சீமான் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

இன்று மதியம் முதல் முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் நல்ல நேரம் பார்த்துத் தங்களது மனுக்களைத் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இது தமிழகத் தேர்தல் களத்தை மேலும் விறுவிறுப்பாக்கியுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் இன்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்! பெரம்பூர் தொகுதியில் வாக்கு சேகரிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share