×
 

போலீஸ் வண்டியால்தான் விஜய் ஊர்வலத்தில் விபத்தா? உண்மையை உடைத்த TN FACT CHECK..!!

போலீஸ் வாகனத்தால் தான் தவெக ஊர்வலத்தில் விபத்து ஏற்பட்டதா என விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரப் பயணங்கள் தொடங்கியதிலிருந்தே, அவரது பிரச்சார வாகனத்தை ரசிகர்களும் கட்சித் தொண்டர்களும் இருசக்கர வாகனங்கள் அல்லது கார்களில் பின்தொடர்வது வழக்கமான காட்சியாக இருந்து வருகிறது. இது உற்சாகத்தின் வெளிப்பாடாகத் தோன்றினாலும், சாலைப் போக்குவரத்தில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பாக கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு பிரச்சார நிகழ்வின்போது, விஜய் பிரச்சார வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்த சில தொண்டர்கள் அஜாக்கிரதையாக சென்றதால் விபத்துக்குள்ளாகினர். இதில் அவர்கள் கீழே விழுந்து லேசான காயங்களுடன் உயிர் தப்பினாலும், இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இன்று தஞ்சையில் விஜய் பிரச்சார நிகழ்ச்சிக்கு சென்ற நிலையில் அவரது வாகனத்தை சிலர் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். அப்போது விபத்து ஏற்பட்டுள்ளது. மொத்தம் ஐந்து பேர் விபத்தில் சிக்கிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் விக்னேஷ் என்ற இளைஞர் தலையில் பலத்த காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இதையும் படிங்க: ஹாப்பி நியூஸ்... வாகனங்களின் தகுதி சான்றிதழ் கட்டண உயர்வு நிறுத்திவைப்பு..! தமிழக அரசு அதிரடி உத்தரவு..!

இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் கட்சி ஊர்வலத்தில் போலீஸ் வாகனம் ரிவர்ஸ் எடுத்ததால் தான் விபத்து ஏற்பட்டு இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் முற்றிலும் பொய் என தமிழக அரசின் தகவல் சரி பார்ப்பகம் தெரிவித்துள்ளது.

தஞ்சையில் தவெக கட்சி தலைவர் விஜய்யை பின்தொடர்ந்த வாகனம் விபத்துக்குள்ளானதுக்கு காரணம் போலீஸ் வாகனம் ரிவர்ஸ் எடுத்ததே என்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது என்றும் விஜயின் வாகனத்தை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தை பார்க்காமல் அதன் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், போலீஸ் வாகனம் ரிவர்ஸ் எடுத்ததால் விபத்து நிகழ்ந்ததாக வதந்தியைப் பரப்பி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிப்.20 வரை பட்ஜெட் கூட்டத்தொடர்... அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முக்கிய முடிவு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share