×
 

பூரண மதுவிலக்கு சாத்தியமே இல்லை! சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. ஒப்பன் டாக்!

பூரண மதுவிலக்கு கொள்கை உலக அளவில் தோல்வியடைந்த திட்டம் என்றும், அது நடைமுறைக்குச் சாத்தியமில்லை என்றும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பூரண மதுவிலக்கு கொள்கை என்பது நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்று எனச் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மது ஒழிப்பு மற்றும் காவல்துறை சீர்திருத்தம் குறித்துத் தனது அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்:

பூரண மதுவிலக்கு என்ற கொள்கையை நான் தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொள்ளவில்லை. அது தற்போதைய சூழலில் நடைமுறைக்குச் சாத்தியமும் அல்ல. பூரண மதுவிலக்கு கொள்கை என்பது உலக அளவில் ஏற்கனவே தோல்வி அடைந்த ஒரு திட்டமாகும். இதற்குச் சிறந்த உதாரணமாக, மதுவிலக்கு அமலில் உள்ள காந்தி பிறந்த குஜராத்தின் போர்பந்தலிலேயே தற்போது மிக அதிகமாக மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்ந்து சமூகப் பிரச்சினைகள் மற்றும் காவல்துறை செயல்பாடுகள் குறித்துப் பேசிய கார்த்தி சிதம்பரம், காவல்துறையின் அணுகுமுறையில் பெரும் மாற்றம் தேவை என்று வலியுறுத்தினார். மக்களை அடக்கி ஒடுக்குவதற்காக ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டதுதான் இந்த போலீஸ் துறை. எனவே, தற்போதைய ஜனநாயகக் காலத்தில் அவர்களின் செயல்பாடுகளை மாற்றியமைக்க வேண்டியது அவசியம். டிஜிபி (DGP) முதல் கடைநிலை கான்ஸ்டபிள் வரை காவல்துறையில் உள்ள அனைவருக்கும் மீண்டும் புதிய தார்மீகப் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: தமிழகத்தின் அரசியல் முக்கியத்துவம் குறையும்! தொகுதி மறுசீரமைப்பு குறித்து கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை!

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தவெக அரசு தகுந்த உதவிகளைச் செய்து வரும் வேளையில், கூட்டணியில் உள்ள காங்கிரஸ் எம்பியே பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை என்று பேசியிருப்பது, மது ஒழிப்பைத் தீவிரமாக வலியுறுத்தி வரும் பாமக மற்றும் பிற அரசியல் கட்சிகளிடையே விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இதையும் படிங்க: சேலையை இழுத்து அடாவடி... திமுக Vs காங்கிரஸ் கவுன்சிலர்கள் இடையே குடுமிப்பிடி சண்டை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share