தமிழகமே எதிர்பார்த்த தருணம்; திருச்சியில் சுற்று பயணத்தை தொடங்கியது குறித்து விஜய் விளக்கம்...!
வர உள்ள ஜனநாயக போருக்கு முன்னதாக உங்களை நேரில் பார்த்துவிட்டு செல்ல வந்தேன் எனக்கூறினார்.
திருச்சியில் தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் மரக்கடை பகுதிக்கு த.வெ.க. தலைவர் விஜய் வந்தடைந்தார். திருச்சி விமானநிலையத்திலிருந்து சுமார் 4 மணிநேர பயணத்திற்குப் பின் மரக்கடைக்கு வந்தடைந்த விஜய், பிரச்சார வேன் மீது ஏறி கையை அசைத்ததும் தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். கட்டுக்கடங்காத கூட்டத்திற்குள் விஜய் தனது பேச்சத்தை தொடங்கினார்.
வணக்கம் எனக்கூறி தனது உரையைத் தொடங்கிய விஜய்,போருக்கு முன்னதாக குல தெய்வத்தை வழிபாடுவார்கள். வர உள்ள ஜனநாயக போருக்கு முன்னதாக உங்களை நேரில் பார்த்துவிட்டு செல்ல வந்தேன் எனக்கூறினார்.
திருச்சி என்றாலே திருப்புமுனை தான். 1956ல் அறிஞர் அண்ணா முதன் முதலில் திருச்சியில் தான் போட்டியிட நினைத்தார். 1974ம் ஆண்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தனது மாநாட்டை திருச்சியில் தான் நடத்தினார். மலைக்கோட்டை பிள்ளையார், தந்தை பெரியாருடைய மண் என திருச்சிக்கு பல பெருமைகள் உள்ளன. மதச்சார்பின்மைக்கு பெயர் பெற்ற இடம், திருச்சி கொள்கைக்கான மண் என திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்கியது குறித்து விஜய் உரையாற்றினார்.
இதையும் படிங்க: அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... விஜய்யை பார்க்கச் சென்ற 50 பேர் மயக்கம்... அடுத்தடுத்து மருத்துவமனைகளில் அனுமதி...!
மக்களாகிய உங்களை பார்த்தவுடன் ஒரு எமோஷனல் கனேக்ட் மனதில் பரவுகிறது என உரையாற்றினார். திருச்சி பரப்புரையில் மைக் பிரச்சனையால் விஜய் பேசியது தொண்டர்களுக்கு கேட்காததால் அவதி அடைந்தனர். அனைத்து தொலைக்காட்சி நேரலையிலும் சிக்கல் ஏற்பட்டதால் விஜய் பேச்சு தொண்டர்களை முழுமையாக சென்றடையவில்லை.
இதையும் படிங்க: செக் வைத்த போலீஸ்... உடைத்தெறிந்த விஜய்... திருச்சியை அதிர விட்ட தரமான சம்பவங்கள்...!