×
 

குடிநீரில் பிளீச்சிங் பவுடர்..! ஹாஸ்பிடலில் மாணவர்கள்..! பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை வெளுத்துவிட்ட டிடிவி தினகரன்..!!

ப்ளீச்சிங் பவுடர் கலந்த தண்ணீரை குறித்து அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்தார்.

அரசுப் பள்ளியில் பிளீச்சிங் பவுடர் கலந்த குடிநீரை அருந்திய மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்தார். மாணவ, மாணவியரின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான சுத்தமான குடிநீரைக் கூட தமிழக வெற்றிக் கழக அரசால் உறுதி செய்ய முடியவில்லை என்ற குற்றம் சாட்டினார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலாம்பட்டி ஊராட்சி அரசுப் பள்ளியில், பிளீச்சிங் பவுடர் கலந்த குடிநீரை அருந்திய 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாக கூறினார்.

மாணவ, மாணவியரின் பாதுகாப்பையும், சுகாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டிய அரசுப் பள்ளியில், அடிப்படைத் தேவைகளில் ஒன்றான பாதுகாப்பான குடிநீரைக் கூட முறையாக வழங்க முடியாமல் அலட்சியப் போக்குடன் செயல்பட்ட அரசு நிர்வாகத்தால் மாணவ, மாணவியரின் உடல் நலம் மற்றும் உயிர்ப் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதாகவும் தெரிவித்தார். 

தனக்குச் சம்பந்தமே இல்லாத துறைகள் தொடர்பான கேள்விகளுக்குக்கூட தாமாக முன்வந்து அடுக்குமொழியில் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், இனியாவது தன் கட்டுப்பாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் நிலவும் அவலநிலையைப் போக்க முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: குத்தகையில் பேருந்து நடத்துனார்களா..? ரேபரேலி நிறுவனத்துக்கு தாரை வார்ப்பு..! TTV தினகரன் தாக்கு.!

எனவே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குவதோடு, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் முறையாகக் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படிங்க: முன்னறிவிப்பின்றி சொத்துவரி உயர்வு..! மக்கள் எதிர்ப்பால் பின்வாங்கிய மாநகராட்சி... விளாசிய TTV தினகரன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share